கிராமக் கோயில் பூஜாரிக்கு பரிசு வழங்கிய நாராயணி பீடத்தின் சக்தி அம்மா. உடன் தருமையாதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த சுவாமிகள் உள்ளிட்டோர்.
கிராமக் கோயில் பூஜாரிக்கு பரிசு வழங்கிய நாராயணி பீடத்தின் சக்தி அம்மா. உடன் தருமையாதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த சுவாமிகள் உள்ளிட்டோர்.

தெய்வத்தின் அருளை மந்திரத்தால் மட்டுமே பெற முடியும்: சக்தி அம்மா

தெய்வத்தின் அருளை மந்திரத்தால் மட்டுமே பெற முடியும் என சக்தி அம்மா குறிப்பிட்டார்.

தெய்வத்தின் அருளை மந்திரத்தால் மட்டுமே பெற முடியும் என சக்தி அம்மா குறிப்பிட்டார்.

வேலூர் நாராயணி பீடத்தின் ஜோதிஸ்வரூபிணி திட்டத்தின் கீழ் 250 கிராம கோயில் பூஜாரிகளை கெளரவிக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் கிராமக் கோயில் பூஜாரிகளுக்கு பரிசு வழங்கி கெளரவித்து சக்தி அம்மா பேசியதாவது:

சுவாமி விக்கிரகங்களை தொட்டு பூஜை செய்யும் கிராமக் கோயில் பூஜாரிகளுக்கு எந்தப் பிறவியிலும் கஷ்டம் வராது. கிராமக் கோயில் பூஜாரிகளின் பக்திக்கு சிறு அங்கீகாரம் தான் இந்த விழா. கோயில்களில் உள்ள விக்கிரகங்களுக்கு சக்தி கொடுப்பது பூஜாரிகளின் வேலையாகும். கிராமக் கோயில்கள் பலதலைமுறைகளாக வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன. அந்தக் கோயில்களின் தெய்வீக சக்தியை பாதுகாப்பது பூஜாரிகளின் கடமையாகும்.

அந்த சுவாமிக்கு உள்ள மூலமந்திரத்தை தினந்தோறும் ஒரு மணி நேரம் உச்சரித்து வந்தால் விக்கிரகத்தின் சக்தியை பலப்படுத்தும். மேலும் கோயில்களுக்கு வேண்டுதலுடன் வரும் பக்தர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும். தெய்வத்தின் அருளை மந்திரத்தின் மூலம் மட்டுமே பெற முடியும் என்றார்.

விழாவுக்கு தலைமை வகித்த தருமையாதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பேசுகையில், பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பாமல் அவர்களைப் பராமரிக்க வேண்டும். கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பு என்பதால் அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கோவை காமாட்சி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணைய நீதிபதி எஸ்.தமிழ்வாணன் ஆகியோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com