இன்று பூணூல் அணியாவிட்டால்? மாற்று ஏற்பாடு விவரங்கள்!

ஆவணி அவிட்டம் பிராமண சமூகத்தவர் முக்கியமாக கொண்டாடும் தினமாகும். உபகர்மா என்று அழைக்கப்படும் ஆவணி அவிட்டத்தன்று உபநயன பூணூலை மந்திரங்கள் சொல்லி மாற்றிக் கொள்வது வழக்கம்.
இன்று பூணூல் அணியாவிட்டால்? மாற்று ஏற்பாடு விவரங்கள்!

ஆவணி அவிட்டம் பிராமண சமூகத்தவர் முக்கியமாக கொண்டாடும் தினமாகும். உபகர்மா என்று அழைக்கப்படும் ஆவணி அவிட்டத்தன்று உபநயன பூணூலை மந்திரங்கள் சொல்லி மாற்றிக் கொள்வது வழக்கம். க்ஷத்ரியர்களும், வைசியர்களும் கூட இந்த வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.

ரிக், யஜூர், சாம, அதர்வண வேத பாராயணம் செய்யும் பிராமணர்களுக்கு அவரவர் வேதத்திற்கு ஏற்ப உபகர்மா அனுஷ்டிக்கும் நாட்கள் வேறுபடுகின்றன.

ரிக் வேத பிராமணர்கள் ஆவணி மாதம் திருவோண நக்ஷத்திரம் வரும் நாள் அன்று அனுஷ்டிக்கிறார்கள்.

சாம வேத பிராமணர்கள் புரட்டாசி மாதம் ஹஸ்த நக்ஷத்ரம் அன்று பூணூல் மாற்றிக் கொள்கிறார்கள்.

கிருஷ்ண யஜூர் வேத பிராமணர்கள் ஆவணி மாதம் அவிட்ட நக்ஷத்ரம் வரும் போது பூணூல் மாற்றிக் கொள்கிறார்கள்.

சுக்ல யஜூர் வேத பிராமணர்கள் பௌர்ணமியின் போது முழு நிலவு மதியம் வரை இருக்கும் போது பூணூல் மாற்றிக் கொள்கிறார்கள்.

அதர்வண வேத பிராமணர்கள் பௌர்ணமி சூரிய உதயம் வரை இருக்கும் நாளில் பூணூல் மாற்றிக் கொள்கிறார்கள்.

ஆகஸ்ட் 7-ம் தேதி கிரஹணம் வருவதால் தோஷம் ஏற்படுகிறது. அன்று யஜூர் வேத பிராமணர்கள் பூணூல் மாற்றிக் கொள்வது உசிதம் இல்லை. எனவே ஆவணி மாதம் அவிட்டம் நக்ஷத்திரம் அன்று அதாவது செப்டம்பர் 6-ம் தேதி யஜூர் வேத பிராமணர்களின் உபகர்மா நிச்சயிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com