இந்தாண்டுக்கான குருப் பெயர்ச்சி எப்போது? 

2017-ம் ஆண்டுக்கான குருப் பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது? குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார்? என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.  
இந்தாண்டுக்கான குருப் பெயர்ச்சி எப்போது? 

2017-ம் ஆண்டுக்கான குருப் பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது? குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார்? என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.  

நிகழும் மங்களகரமான கலியுகாதி 5118 - சாலிவாகன சகாப்தம் 1939 - பசலி 1427 - கொல்லம் 1189-ம் ஆண்டு ஸ்வஸ்தி் ஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் வருஷ ரிது ஆவணி மாதம் 17ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 02.09.2017 சுக்ல ஏகாதசியும் சனிக்கிழமையும் பூராட நக்ஷத்ரமும் சௌபாக்கியம் நாமயோகமும் பத்ரை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 08.20க்கு - காலை 9.21க்கு குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு மாறுகிறார்.

• துலா ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு அதிகமாக இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.

• துலா ராசிக்கு வரும் குரு பகவான் விருச்சிக ராசிக்கு விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18-ம் தேதி - 04.09.2018 - வியாழக்கிழமையன்று மாறுகிறார்.

• துலா ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் கும்ப ராசியையும் - ஏழாம் பார்வையால் மேஷ ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் மிதுன ராசியையும் பார்க்கிறார்.

• குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்கும் பலமே அதிகம். எனவே, குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com