இந்துமத அற்புதங்கள் 52: அழுகைக்கு இரங்கிய அருள் 

திருமருகல் என்னும் தலத்தில் வழிபட்டுப் பாடல் பாடித் தங்கியிருந்தார் திருஞானசம்பந்தர்.
இந்துமத அற்புதங்கள் 52: அழுகைக்கு இரங்கிய அருள் 

திருமருகல் என்னும் தலத்தில் வழிபட்டுப் பாடல் பாடித் தங்கியிருந்தார் திருஞானசம்பந்தர். அத்தலத்து ஆண்டவனாம் மாணிக்கவண்ணரை வணங்கி, அவ்வூர் திருமடத்தில் தங்கினார். மடத்தில் ஞானசம்பந்தப் பெருமான் தங்கியிருந்த நேரத்தில், அருகாமையில் அழுகுரல் கேட்டது. ஒரு பெண் அழும் குரல். "யார் அழுகிறார்கள்?'' எனத் தன்னுடன் வந்தவர்களைக் கண்டறியச் சொன்னார்.

இறைவன் - மாணிக்கவண்ணர், ரத்னகிரீஸ்வரர்
இறைவி - வண்டுவார்குழலி, ஆமோதாளகநாயகி.

அவர்கள் சென்று விசாரித்துவிட்டுத் திரும்பினார்கள். ஒரு இளம்பெண் தன்னை மணக்கவிருந்தவனுடன் அம்மடத்திற்கு வந்திருந்தாள். வந்த இடத்தில் அவன் பாம்பு தீண்டி இறந்து போனான். அது கண்டு அவள் கதறினாள். செய்தியைக் கேள்விப்பட்ட ஞானசம்பந்தர், திருமடத்தில் அப்பெண் இருந்த பகுதிக்குச் செல்ல, அவரிடம் வந்து இறைஞ்சினாள் அவள்.

அந்தப் பெண்ணுக்கு "அஞ்சேல்!''
என்று அபயம் கொடுத்து, அந்த
இளைஞனின் விஷம் தீரவும் அவன் நன்கு எழவும் பதிகம் பாடினார்.
திருமருகலில் விஷம்தீர திருஞானசம்பந்தர் அருளிப் பாடிய பதிகம்
"சடையாய் எனுமால் சரணீ எனுமால்
விடையாய் எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள் உள்மெலிவே''

திருமருகல் தலத்தினைச் சென்றடையும் வழி:
நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். திருவாரூர், நன்னிலம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை முதலிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com