பல ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் முழு சூரிய கிரகணம் இன்று! இதை வெறும் கண்ணால் பார்க்கலாமா?

இன்று நிகழும் சூரிய கிரகணமானது 99 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முழு சூரிய கிரகணமாகும். 
பல ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் முழு சூரிய கிரகணம் இன்று! இதை வெறும் கண்ணால் பார்க்கலாமா?


இன்று நிகழும் சூரிய கிரகணமானது 99 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முழு சூரிய கிரகணமாகும். 

சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அது ஒரு அமாவாசை நாளன்று ஏற்படும். சூரியனை நிலவு மறைக்கும் தன்மைக்கு ஏற்ப, முழுமையாக மறைத்தால் முழு கிரகணம், பகுதியாக மறைத்தால் பகுதி கிரகணம், கங்கண கிரகணம், கலப்பு கிரகணம் எனப் பல வகை பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

எப்பொழுது கிரகணம்?
சூரிய கிரகணம் ஆகஸ்டு 21(இன்று) காலை 9:00 முதல் - மதியம் 2:15 வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் தெரியும்?
இந்தச் சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும் நாசா தெரிவித்துள்ளது. மேலும் ஐரோப்பா, வட கிழக்கு ஆசியா, வட மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்க்டிக் ஆகியவற்றில் முழுமையாக மற்றும் பகுதியாக சில இடங்களில் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் உள்ள 14 மாகாணங்களில் முழுமையாகத் தெரியும். ஆனால் தமிழகம் மற்றும் இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகணத்தைப் பார்க்க இயலாது. இதோடு, அடுத்த முழுமையான சூரிய கிரகணம் 2019-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி ஏற்படவுள்ளது. இதற்கிடையே அதே வருடம் டிசம்பர் மாதம் வளைய சூரிய கிரகணம் ஏற்படவுள்ளதாகவும், அதை மீண்டும் 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் தான் காணமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் கண்ணால் பார்க்கலாமா?
பொது மக்கள் இதை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. அதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளி தடுப்பு கண்ணாடிகளால் மட்டுமே காண வேண்டும். 3 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் கிரகண கண்ணாடி அணிந்து பார்ப்பதும் பாதுகாப்பற்றது. இது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com