விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுவது ஏன்?

முன்னொரு சமயம் அனலாசுரன் என்ற ஒரு அரக்கன் தேவர்களையும், ரிஷிகளையும் மிகவும் துன்புறுத்தியதோடு யாகங்களுக்கும், நற்காரியங்களுக்கும் இடையூறாக இருந்து வந்தான். 
விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுவது ஏன்?


முன்னொரு சமயம் அனலாசுரன் என்ற ஒரு அரக்கன் தேவர்களையும், ரிஷிகளையும் மிகவும் துன்புறுத்தியதோடு யாகங்களுக்கும், நற்காரியங்களுக்கும் இடையூறாக இருந்து வந்தான். 

அவன் வாயிலிருந்து அக்னியை உமிழ்ந்து எதிரிகளை அருகில் வரவிடாமல் செய்வதால், இந்திரனால் அவனை போரிட்டு வெல்ல முடியவில்லை. வேறு வழியின்றி இந்திரன், தேவர்கள் புடைசூழ கைலாயம் சென்று விநாயகப் பெருமானிடம் அனலாசுரனை வதம் செய்து தங்களைக் காக்க வேண்டுமென்று முறையிட்டார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்ற விநாயகப்பெருமான் வெற்றி பெற முடியாமல், அவனை அப்படியே விழுங்கிவிட்டார். 

வயிற்றுக்குள் சென்ற அரக்கன் வயிற்றை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அவனுடைய வெப்பத்தைத் தாங்க முடியாததால், அவருக்குக் கங்கை நீரால் குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லை கொண்டு வந்து விநாயகரின் தலைமேல் வைத்தார். அருகம்புல்லின் மகத்துவத்தால் அவரது எரிச்சலும் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகிவிட்டான். ஆகவே தான் அவரின் வழிபாட்டில் அருகம்புல் முக்கிய இடம் பெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com