மேனாம்பேடு பைரவர் ஆலயத்தில் இன்று சிறப்பு ஹோமம்

சென்னை, அம்பத்தூர், மேனாம்பேடு கிராமத்தில் ஈசான்ய லிங்கமாக ஸ்ரீ அன்னபூரணி சமேத ஆத்மநாத சுவாமி ஆலயத்தில் ஏகாதச பைரவர் ஹோமம் நடைபெற உள்ளது.
மேனாம்பேடு பைரவர் ஆலயத்தில் இன்று சிறப்பு ஹோமம்

சென்னை, அம்பத்தூர், மேனாம்பேடு கிராமத்தில் ஈசான்ய லிங்கமாக ஸ்ரீ அன்னபூரணி சமேத ஆத்மநாத சுவாமி ஆலயத்தில் ஏகாதச பைரவர் ஹோமம் நடைபெற உள்ளது.

நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 13-ம் தேதி (29.08.2017) செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி, அனுஷ நட்சத்திரம், சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 6.00 மணி முதல் ஸ்ரீ கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஏகாதச பைரவர் ஹோமம், லக்ஷமி ஹோமம் ஆகிய ஹோமங்களைத் தொடர்ந்து பகல் 11.00 மணிக்கு விருச்சிக லக்னத்தில் ஸ்ரீ அன்னபூரணி சமேத ஆத்மநாத சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற இருப்பதால், பக்தர்கள் அனைவரும் தங்கள் குடும்ப சகிதமாக வந்து தரிசித்து இறைவன் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதனைத் தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.

ஏகாதச பைரவ ஹோமத்தினால் பெறும் பயன்கள்
இந்த ஆண்டு இராகு, கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி நடைபெற உள்ளது. இந்தக் கிரகங்களின் தீய பலன்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களைப் பெற இந்த ஹோமம் கைமேல் பலன் நல்கும்.

அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஏழரை சனி, பாத சனி, ஜென்ம சனி போன்ற பாதிப்புகயிலிருந்து விடுபடவும், திசை, புத்தி பாதிப்பில் இருந்து விடுபட்டு நற்பலன்கள் பெறவும், வறுமை நீங்கி செல்வ வளம் பெருகவும், திருமணத் தடை நீங்கி நல்ல மணவாழ்வு அமையவும், குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்குப் புத்தி பாக்யம் உண்டாகவும், இழந்த சொத்துக்கள் மற்றும் பொருட்களைத் திரும்பிப் பெறவும், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கவும், வாழ்க்கையில் வெற்றி பெறவும், பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் உண்டான துன்பம் நீங்கவும், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படவும், துர்மரணம் வராமல் தடுக்கவும், நல்ல புத்தியும், முக்தியும் கிடைக்கவும், பித்ரு தோஷம் நீங்கவும், தலை உச்சி முதல் கால் பாதம் வரை உள்ள வியாதிகள் தீரவும், கல்வி செல்வமும், ஞானத்தையும் நல்கும் இந்த பைரவ வழிபாடு நமக்கு அருள் செய்கிறது.

இப்பேற்பட்ட அற்புதப் பலன்களை நல்கும் பூஜையை அருள்மிகு திருநிலை நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர், சீர்காழி சட்டநாதர் ஆலயத்தில் இருந்து திரு.வெங்கட்ராமன்(ரிஷி) சிவாச்சாரியார் நடத்த உள்ளார். இந்த சிறப்பான ஹோமத்தில் பங்குபெற விரும்புபவர்கள் ரூ.1001/- செலுத்தி ஹோமத்தில் கலந்துகொண்டு இறையருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com