கே.சி.எஸ்.ஐயர் கணித்த இந்த வார ராசி பலன்கள் (டிசம்பர் 8-14)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (டிசம்பர் 8 - டிசம்பர் 14) ராசி பலன்களை துல்லியமாக நமக்கு கணித்து வழங்கியுள்ளார். 
கே.சி.எஸ்.ஐயர் கணித்த இந்த வார ராசி பலன்கள் (டிசம்பர் 8-14)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (டிசம்பர் 8 - டிசம்பர் 14) ராசி பலன்களை துல்லியமாக நமக்கு கணித்து வழங்கியுள்ளார். 

***

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். உங்களின் நீண்டகால எண்ணங்கள் நிறைவேறும். பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உடன்பிறந்தோரிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். தொழில் தொடர்பான பயணங்கள் நன்மையில் முடியும். 

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையோடு பழகவும். வியாபாரிகள் நல்ல முறையில் வியாபாரத்தைச் செய்து முடிப்பீர்கள். சக கூட்டாளிகளிடம் மனம் திறந்து பேசவேண்டாம். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களில் நல்ல பலனை அடைவீர்கள். கால்நடைகள் மூலம் விவசாயத்தைப் பெருக்க இது சாதகமான வாரம். 

அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்படும். மேலிடத்தின் ஆதரவும் குறையும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். ரசிகர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். 
பெண்மணிகளுக்கு பணவரவு அதிகரிக்கும். உங்கள் கோரிக்கைகளை குடும்பத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். எனினும் ஆசிரியர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 8,9. 

சந்திராஷ்டமம்: இல்லை.

***
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

வெற்றிகரமான வாரம். இடையூறுகள் விலகி காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களின் மதிப்பு மரியாதை உயரும். வருமானம் சீராக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துகளும் வந்து சேரும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஏற்பட்ட சிரமங்கள் குறையும். வருமானம் படிப்படியாக உயரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுக மனநிலைமை தென்படும். லாபத்தால் மனம் திருப்தியடையும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். வாய்க்கால் வரப்பு விஷயங்களில் முடிவு உங்களுக்குச் சாதகமாக இருக்கும்.

அரசியல்வாதிகள் எதிரிகளின் தொல்லைகளுக்கு ஆளாவீர்கள். ஆகவே பேச்சில் கண்ணியம் குறையாமல் கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.  பணவரவும் நன்றாக இருக்கும். பெண்மணிகள் கணவரிடம் அன்போடு நடந்து கொள்வார்கள். சில ஆடம்பரச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவீர்கள்.  பெற்றோரின் ஆதரவு சற்று குறைந்திருக்கும்.

பரிகாரம்: அம்பாள் தரிசனம் உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 8,10. 

சந்திராஷ்டமம்: இல்லை.  

***
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் அறிவாற்றல் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் சிறப்புகளைக் காண்பீர்கள். காரியங்களில் நிலவி வந்த தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். மனதிலும் உடலிலும் புதிய பொலிவு தென்படும். சிறு விரயங்களும் ஏற்படும். அடுத்தவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைத்திறன் அதிகரிக்கும். வருமானம் பெருகும். சிறிய அளவு முயற்சிகளிலும் நல்ல பலனை அடைவீர்கள். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கும். புதிய வர்த்தகம் செய்யும் எண்ணம் மேலோங்கும். விவசாயிகள் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். அதனால் விவசாயத் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்லவும். 

அரசியல்வாதிகளுக்கு முட்டுக்கட்டைகள் விலகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சிரமங்கள் உண்டாகும். புதிய படைப்புகளைத் தயாரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் காண்பீர்கள். 

மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது. வெளிவிளையாட்டின்போது காயம் ஏற்பட வாய்ப்புண்டு.

பரிகாரம்: சூரியபகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 9,10.

சந்திராஷ்டமம்: இல்லை.

***

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் தைரியத்துடனும் ஆர்வத்துடனும் செய்து முடிப்பீர்கள். சேமிப்பு உயரும். கணிசமான முதலீடுகளைச் செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். எவரிடமும் வெளிப்படையாகப் பேசாதீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் கை வந்து சேரும். மறு உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு சமூகத்தில் மதிப்பு உண்டாகும். கொள்முதலில் சிறப்பு உண்டாகும். குடும்பத்தில் பொறுப்பு உண்டாகும்.

அரசியல்வாதிகள்  தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகசேவையில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கலைத்துறையினர் நன்கு உழைத்து நல்ல பலனை அடைவீர்கள். கைநழுவிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் உங்களைத் தேடி வரும். 

பெண்மணிகள் குடும்பத்தில் நிகழும் சுப நிகழ்ச்சிகளில் சந்தோஷமடைவீர்கள். மாணவமணிகள் அதிகமாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 10,11. 

சந்திராஷ்டமம்: இல்லை.

***
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மதிப்பு மரியாதை உயரும். நீண்டகால எண்ணங்களில் ஒன்று நிறைவேறும். பூர்வீகச் சொத்துகளில் சிறு பிரச்னை உண்டாகும். உடன்பிறந்தோரை அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் இருந்து வந்த  பிரச்னைகள் குறையும். விரும்பிய இடமாற்றத்தையும் ஊதிய உயர்வையும் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாக முடியும். கூட்டாளிகள் சற்று ஒதுங்கியே இருப்பார்கள். விவசாயிகள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். கால்நடைகளையும் வாங்கி உபரி வருமானத்தைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். கட்சி மேலிடத்தின் பார்வையிலிருந்து சற்று விலகியே இருக்கவும். கலைத்துறையினர் உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகமடைவீர்கள். புதிய படைப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். 

பெண்மணிகள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 8,11. 

சந்திராஷ்டமம்: இல்லை.


***
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தடைகள் அகலும். எடுத்த காரியங்களில் வெற்றி பெற்று பெருமை அடைவீர்கள். திறமைக்குத் தகுந்த செயல்களைச் செய்வீர்கள். சமூகத்தில் உங்கள் பெயரும் புகழும் உயரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் மீது மேலதிகாரிகளுக்கு ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி விற்பனையை பலமடங்கு பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். விவசாய இடு பொருள்களுக்கு செலவு செய்வீர்கள். 

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த உயர்பதவிகளை அடைவீர்கள். சமுதாயப் பணியின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவீர்கள். கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும். பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

மாணவமணிகள் அனாவசியமான பிரச்னைகளைத் தவிர்க்கவும். 

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 9,12. 

சந்திராஷ்டமம்: இல்லை.

***
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)


குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். தேக ஆரோக்கியமும் சீராக இருக்கும். சிலருக்கு புதிய அசையாச் சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் வசிக்கும் வீட்டை நவீனப்படுத்துவார்கள். செய்தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பயணங்களாலும் நன்மைகள் உண்டாகும்.  

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாக பொருள்களின் தரத்தை உயர்த்தவும். விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். 

அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு பணவரவு அதிகரிக்கும். சிறந்த வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திறமைக்கேற்ற பெயரும் புகழும் கிடைக்கும். பெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். புதிய ஆடைகளை வாங்குவீர்கள். 

மாணவமணிகள் கல்வியில் கூடுதலான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விளையாட்டிலும் ஈடுபட்டு ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ளவும்.

பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 11,12. 

சந்திராஷ்டமம்: இல்லை.

***
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். தேவைக்களுக்கேற்ப செலவுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் புதிய உற்சாகமும் சந்தோஷமும் நிலவும். செய்யும் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு சந்தையில் போட்டிக்கு ஏற்றவாறு பொருள்களை விற்பனை செய்வீர்கள். திருப்திகரமான லாபத்தையும் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் கவனமாகச் செயல்பட்டால் வெற்றி பெற முடியும். உங்களுக்குச் சம்பந்தமில்லாத செயல்களில் ஈடுபட்டுப் பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த வரவேற்புகளைப் பெறுவீர்கள். வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 

பெண்மணிகள் உற்றார் உறவினர்களைச் சந்தித்து உற்சாகமடைவீர்கள். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்தவும். 

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 11,14. 

சந்திராஷ்டமம்: இல்லை.

***
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

குழப்பங்கள் அகலும். மனதில் புதிய தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். உற்றார் உறவினர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். உடன்பிறந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் தீரும்.  

உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைக்க முயற்சிக்கவும். பதவி உயர்வுக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் நன்மையை காண்பீர்கள். பேச்சுத் திறனால் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டவும். பால் வியாபாரம் செய்வோர் சற்று கூடுதல் வருமானத்தைப் பெறுவார்கள். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். 
பெண்மணிகள் சற்று குழப்பமான நிலைமையை சந்திப்பீர்கள். ஆனால் குடும்பத்தில் உள்ள ஒற்றுமையில் பாதிப்பு ஏற்படாது. மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்தவும். நல்ல மதிப்பெண்கள் பெற அதிகம் உழைக்க வேண்டும்.

பரிகாரம்: ஸ்ரீ மஹாலட்சுமியை வழிபட்டு சிறப்படையுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 9,13. 

சந்திராஷ்டமம்: 8.   

***

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வேலைத் தொந்தரவுகள் அதிகரிக்கும். இதனால் வீண் அலைச்சல்களுக்கும் ளாவீர்கள். உடல் சோர்வடையும். ஆனாலும் வார இறுதியில் இத்தகைய நிலைமைகளால் மாற்றங்கள் தென்படும். மனதில் உற்சாகம் பிறக்கும். இல்லத்தில் நிம்மதி நிறையும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையிலிருந்த பிரச்னைகள் குறையும். சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும். வியாபாரிகளுக்கு வார இறுதியில் லாபம் தென் படும். எதிர்கால இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புதிய குத்தகைகள் கிடைக்கும். கால்நடைகளால் நன்மைகள் உண்டு. 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். போட்டிகளையும் சந்திக்க நேரிடும். கலைத்துறையினருக்கு  புகழும் பாராட்டும்  கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். எனவே புதிய முயற்சிகள் வேண்டாம். பெண்மணிகள் பொருளாதார வளத்தால் திருப்தி அடைவீர்கள். 

மாணவமணிகள் படிப்பில் சிறந்து விளங்குவீர்கள். பெற்றோர்களின் ஆதரவுடன் விளையாட்டில் கலந்து கொண்டு வெற்றியடைவீர்கள். 

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 13,14. 

சந்திராஷ்டமம்: 9,10. 

***
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட வேலைகளில் எந்தவித கவலையுமின்றி ஈடுபடுவீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.  பெற்றோரிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். சுபச் செய்திகளால் மனம் திருப்தியடையும்.  

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். அதிகாரிகளும் சக ஊழியர்களும் உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாக முடியும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். விவசாயிகள் கடினமாக உழைக்க வேண்டி வரும். கால்நடைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிக்கவும்.  

அரசியல்வாதிகளின் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். உட்கட்சி விவகாரங்களில் அதிகமாகத் தலையிட வேண்டாம். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும். ரசிகர்களின் ஆதரவு குறையும். 

பெண்மணிகளுக்கு பொருளாதாரத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை தென்படும். மாணவமணிகள் தினமும் நன்றாகப் படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.  

பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 10,14.

சந்திராஷ்டமம்: 11,12. 

***
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். வருமானம் உயரும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருமளவுக்குக் கிடைக்கும். உங்கள் அந்தஸ்து கௌரவம் கூடும். உயர்ந்தவர்களைச் சந்தித்து திட்டமிட்ட வேலைகளைச் சுமுகமாக முடிப்பீர்கள்.  வழக்குகள் சாதகமாகவே முடியும். 

உத்தியோகஸ்தர்களின் அலுவலகப் பணிகள் அனைத்தும் சிறப்பாக முடியும்.  எதையும் ஒருமுறைக்கு  இருமுறை யோசித்துச் செய்யவும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். கூட்டாளிகளை முழுவதும் நம்ப வேண்டாம்.   விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவீர்கள். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும். கால்நடைகளின் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளின் முயற்சிகள் முழுமையாக வெற்றி பெறாது. எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். கலைத்துறையினர் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் உருவாகும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். உடல்நலம் மனவளம் இரண்டும் சிறப்பாக அமையும். 

மாணவமணிகள் கல்வியில் ஆர்வம் செலுத்துவீர்கள். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.    

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 8,12.

சந்திராஷ்டமம்: 13,14.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com