கே.சி.எஸ்.ஐயர் கணித்த இந்த வார பலன்கள் (டிசம்பர் 15-21)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (டிசம்பர் 15 - டிசம்பர் 21) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன்பெறுங்கள்.
கே.சி.எஸ்.ஐயர் கணித்த இந்த வார பலன்கள் (டிசம்பர் 15-21)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (டிசம்பர் 15 - டிசம்பர் 21) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன்பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

நிறைவான வாரம். வெற்றிகள் குவியும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சமூகத்தில் உங்கள் பெயரும் புகழும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆன்மிகத்திலும் தர்மகாரியங்களிலும் ஈடுபடுவீர்கள். மனதில் தீய எண்ணங்களுக்கு இடம் தராமல் நேர் வழியில் செயல்படவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். சக ஊழியர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நலமாக முடியும். புதிய யுக்திகளை வியாபாரத்தில் புகுத்த நினைப்பீர்கள். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். புதிய குத்தகைகளை துணிந்து எடுக்கலாம். 

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். கலைத்துறையினருக்கு எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் செய்வர். 
பெண்மணிகளுக்கு கணவருடனான பிரச்னைகள் தீரும். மாணவமணிகள் கடுமையாக உழைத்தால்தான் அதற்கேற்ற பலனைப் பெற
முடியும். யாரிடமும் மனம் திறந்து பேசவேண்டாம். 

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 15,18. 

சந்திராஷ்டமம்: 16,17. 


ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

உயர்ந்த எண்ணங்களுடன் நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். உழைப்புக்கேற்ற பலனடைவீர்கள். குடும்பச் சூழ்நிலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். உறவினர்கள் அனுசரித்து நடந்து கொள்வார்கள். உடன்பிறந்தோர் வகையில் நன்மைகள் அதிகரிக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகள் அனைத்தையும் சாதுர்யத்துடன் செய்து முடிப்பீர்கள். பயணங்களால் நல்ல அனுபவங்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கடும் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். ஆகவே புதிய முதலீடுகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். விவசாயிகள் தங்கள் பணிகளை வெறறிகரமாகச் செய்து முடிப்பீர்கள். புதிய குத்தகைகள் உங்களைத் தேடிவரும்.  

அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ளவும். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தவும். கலைத்துறையினர் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.  பணவரவுடன் புகழும் கிடைக்கும். 

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். வருங்காலக் கனவுகள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படும். 

பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 21. 

சந்திராஷ்டமம்: 18,19,20. 


மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிறையும். உங்கள் எண்ணங்களைச் சரியாகச் செயல்படுத்துவீர்கள். பொருளாதாரத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் முக்கியமான தேவைகள் பூர்த்தியடைந்துவிடும்.  உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். மருத்துவச் செலவுகளும் குறையும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் திருப்திகரமாக முடியும். பணவரவும் சீராக இருக்கும். வியாபாரிகள் செலவு செய்து கடையை விரிவுபடுத்துவார்கள். உங்களின் நூதன முயற்சிகள் சாதகமான பலன்களைப் பெற்றுத் தரும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும்.புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிகளை சிரத்தையுடன் செயல்படுத்துவீர்கள். மேலிடத்தின் ஆதரவுடன் புதிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்து நற்பலனை அடைவீர்கள். சக கலைஞர்களும் உதவுவார்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். கணவர் வழி உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் தென்படும். நண்பர்களிடம் கவனமாக பழகவும். 

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16,17. 

சந்திராஷ்டமம்: 21. 


கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பணம் பலவகையிலும் உங்களை வந்து சேரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்த உகந்த வாரமிது. புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக பைசலாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். 

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைளை நாடிச்சென்று வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். உடன் உழைப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதை முழுவதும் அனுபவிக்க முடியாத வகையில் சில குறுக்கீடுகள் ஏற்படும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை நிறைவேற்றி வெற்றி நடை போடுவீர்கள். சக கலைஞர்களும் ஒத்துழைப்பை நல்குவார்கள். 

பெண்மணிகள் இல்லத்தில் நிலவும் நிம்மதியான சூழ்நிலையால் திருப்தியடைவீர்கள். மாணவமணிகள் வருங்காலத்திற்குச் செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். 

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 17,18. சந்திராஷ்டமம்: இல்லை. 


சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

புண்ணிய காரியங்களைச் செய்வீர்கள். முயற்சிகள் வெற்றி பெறுவதில் தடைகள் ஏற்பட்டாலும் முடிவு நன்றாகவே அமையும். பொருளாதாரம் சராசரிக்கும் குறைவாகவே இருக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தேக ஆரோக்கியம் சீராகவே இருக்கும்.  

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் நிராகரித்து வருத்தமடையச் செய்வார்கள். அலுவலக ரீதியான பயணங்களும் நன்மையாக இராது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். புதிய முதலீடுகளை கூட்டாளிகளை கலந்தாலோசித்த பிறகே செய்யவும். விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாகவே இருக்கும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும்.  

அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். கலைத்துறையினர் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள்.  எதையும் யோசித்துச் செயல்படவும்.  

பெண்மணிகள் கணவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். குடும்பத்தினருக்கு  இடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேசும் போது எச்சரிக்கை தேவை. மாணவமணிகள் பெற்றோர் மற்றும் சகோதரர் களால் நன்மை அடைவீர்கள். 

பரிகாரம்: அம்மனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 17,19. 

சந்திராஷ்டமம்: இல்லை. 


கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

அலைபாயும் மனதை கட்டுப்படுத்தவும். இந்த வாரம் சில்லறைச் செலவுகள் அதிகரிக்கும். மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் வேலைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும். ஆனாலும் வார இறுதியில் இத்தகைய நிலைமை மாறிவிடும். வருமானம் படிப்படியாக உயரத்தொடங்கும்.  

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திட்டமிட்டு முடிப்பீர்கள். உழைப்புக்குத் தகுந்த வருமானத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு முதலீடுகளால் பலன் கிடைக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளுங்கள். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் நன்றாக முடியும். விளைபொருள்களின் விற்பனையில் லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கலைத்துறையினரை மற்றவர்கள் பாராட்டுவார்கள். ஒப்பந்தங்கள் அனைத்தும் லாபகரமாகவே முடியும். 

பெண்மணிகள் பொருளாதார வளத்தால் திருப்தியடைவீர்கள். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டினால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறலாம்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16,19. 

சந்திராஷ்டமம்: இல்லை. 


துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய) 

கவலைகள் குறையும். பொருளாதார நிலையில் படிப்படியான முன்னேற்றம் தென்படும். காரியங்களில் அனுகூலம் ஏற்படும். நண்பர்களும் கூட்டாளிகளும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் நன்மைகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம்  விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாக முடியும். விவசாயிகளுக்கு கொள் முதல் லாபம் நன்றாக இருக்கும். விவசாய வல்லுநர்கள் உதவுவார்கள். கால்நடைகளாலும் வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு சுமாராகவே இருக்கும். அதனால் அவர்களிடம் நெருங்காமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்தைப் பெறுவீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதனால் நிதானத்துடன் செயல்படவும்.  மாணவமணிகள் அக்கறையுடன் படித்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். 

பரிகாரம்: விநாயகரை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 17,21. சந்திராஷ்டமம்: இல்லை.


விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தெய்வ அனுகூலம் சிறப்பாக இருக்கும். உங்களின் செயல்களில் திருப்பம் உண்டாகும். வெளியூரிலிருந்து சந்தோஷமளிக்கும் செய்திகள் தேடி வரும். உடலிலும் மனதிலும் இருந்த சோர்வுகள் அகன்று உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.  வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளும் செய்யலாம். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.   விவசாயப் பணிகளில் சிறு இடையூறுகள் தோன்றினாலும் அவை தானாகவே விலகிவிடும். 

அரசியல்வாதிகள் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். புதிய பதவிகளில் அமர்ந்து மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த பலனைக் காண்பீர்கள். பணவரவு நன்றாக இருந்தாலும் மனதில் மகிழ்ச்சி குறைவாகவே இருக்கும். 

பெண்மணிகள் கணவரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற மேற்கொள்ளும் பயிற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். 

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 18,21. 

சந்திராஷ்டமம்: இல்லை.


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரம் சீராக இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள், சமுதாயத்தில் உயர்ந்தவர்களைச் சந்திப்பீர்கள். ஆன்மிகத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு படிப்படியாகக் குறையும். பணவரவு நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு வருமானம் சீராகும். மறைமுகப்போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு வேலையாட்களால் சிறு சிறு தொல்லைகள் ஏற்படும். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். கொள்முதல் லாபம் நன்றாகவே இருக்கும்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் கோரிக்கைகளைத் தலைமையிடம் கூறிவிட்டு அமைதியாக இருக்கவும். கலைத்துறையிருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சக கலைஞர்களுடன் விரோத மனப்பான்மையை விட்டொழிக்கவும். 

பெண்மணிகள் நிதானத்துடன் செயல்படவும். மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களை அள்ளுவார்கள். 

பரிகாரம்: சனிக்கிழமையன்று அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 19,20. 

சந்திராஷ்டமம்: இல்லை.


மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பெரும்பாலான பிரச்னைகளில் தெளிவான முடிவுகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் எந்தக் கவலையுமின்றி ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான  நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். புதிய வாடகை வீட்டுக்கு மாறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்புடன் நடந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தை அள்ளுவீர்கள். சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளிக்கும் தைரியத்தைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சலும், விற்பனையும் அமோகமாக இருக்கும். புதிய குத்தகைகளை எடுக்கும் எண்ணங்கள் மேலோங்கும். 

அரசியல்வாதிகளுக்கு பொதுச்சேவையில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். உட்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் நற்பலன்களை அடைய முடியும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் செலவுகளைத் தவிர்க்கவும். 

மாணவமணிகள் முயற்சிகளுக்குத் தகுந்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். 

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 18,20. 

சந்திராஷ்டமம்: இல்லை. 


கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய) 

பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் சிறு விரயங்களும் உண்டாகும். இருப்பினும் குடும்ப அந்தஸ்து உயரும். தனித்து காரியங்களைச் செய்யும் ஆற்றல் உண்டாகும். திட்டமிட்டுப் பணியாற்றுவீர்கள். பெயரும் புகழும் படிப்படியாக வளரும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பிடிப்பான நிலைமை உண்டாகும். வேலைகளைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். வியாபாரிகள்  வியாபாரத்தில் புதுமைகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். கூட்டாளிகள் சுமுகமாக நடந்து கொள்வார்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். பழைய கடன்களை அடைத்தப்பிறகே புதிய குத்தகைகளை எடுக்கவும். 

அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிகளில் சிறு தடங்கல்களைக் காண்பீர்கள். மாற்றுக் கட்சியினரிடம் மனம் திறந்து பேசவேண்டாம். கலைத்துறையினரின் திறமைகளை மற்றவர்கள் பாராட்டுவார்கள். ரசிகர்களின் ஆதரவுடன் மனதிற்கினிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தினருடன் சகஜமாகப் பழகுவீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பிலும் விளையாட்டிலும் நல்ல பெயர் வாங்குவீர்கள்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 20,21. 

சந்திராஷ்டமம்: இல்லை.


மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்கள் செயல்களில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் விலகும். விரக்திகளும் விரயங்களும் நீங்கி வருவாய் பெருகும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். பயணங்கள் மூலம் நன்மைகளை அடைவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை நன்கு செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விற்பனையை பெருக்குவீர்கள்.      விவசாயிகளுக்கு மகசூல் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்காது. அதனால் பழைய குத்தகைகளை சரிவர முடித்து அதற்கான லாபத்தைப் பெறுவதே சிறப்பு.

அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிக்கு ஏற்ற பொறுப்புகளைப் பெறுவீர்கள். பெயரும் புகழும் உயரும். கலைத்துறையினர் நன்றாக உழைப்பார்கள். வரவேற்புகள் குறைவதைப் பற்றி கவலைப் படாதீர்கள். 
பெண்மணிகள் கணவரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். மாணவமணிகள் சராசரிக்கும் சற்று குறைவான மதிப்பெண்களையே பெறுவீர்கள். இருப்பினும் பெற்றோரின் ஆதரவு உற்சாகத்தைக் கொடுக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 17,18. 

சந்திராஷ்டமம்: 15.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com