வாஸ்துப்படி உங்கள் வீட்டில் பூஜையறை சரியான இடத்தில் உள்ளதா?

நாம் குடியிருக்கும் வீட்டில் பூஜையறையை சரியான திசையில் வைத்துள்ளோமா? அப்படி இல்லையெனில் எங்கு வைக்கலாம், அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். 
வாஸ்துப்படி உங்கள் வீட்டில் பூஜையறை சரியான இடத்தில் உள்ளதா?


நாம் குடியிருக்கும் வீட்டில் பூஜையறையை சரியான திசையில் வைத்துள்ளோமா? அப்படி இல்லையெனில் எங்கு வைக்கலாம், அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். 

சொந்த மண்ணில் வீடு கட்டும் போது பூஜை அறை என்று தனியாக ஒதுக்கி வீடு கட்டிவிடலாம். ஆனால், கட்டிய வீட்டில் அதாவது, பிளாட்களில் நாம் இந்தப் பூஜையறையை கட்டாயம் எதிர்பார்க்க 

முடியாது. நமக்கு தேவையெனில் மரத்திலான பூஜையறையை கடைகளில் வாங்கி அமைத்துக் கொள்ளலாம். அவ்வாறு அமைக்கப்படும் பூஜையறையாக இருந்தாலும் சரி, கட்டப்படும் பூஜையறையாக இருந்தாலும் சரியான திசையில் அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். 

நம்முடைய வீட்டில் பூஜையறை இருக்க வேண்டிய திசையென்றால் அது,

1. தென்கிழக்கு பகுதி

2. வடமேற்கு பகுதி

3. தெற்கு நடுப்பகுதி

4. மேற்கு நடுப்பகுதி

இந்த இடங்களில் மட்டுமே பூஜையறை வரவேண்டும். இந்தப் பகுதியில் வரக்கூடிய பூஜையறையினால் மட்டுமே பல நன்மைகள் வந்து சேரும். 

பூஜையறை வரக்கூடாத இடங்களும் அதன் தீமைகளும்

* நாம் குடியிருக்கும் வீட்டில் எங்கு பூஜையறை வரவேண்டும் என்று மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தை தவிர வேறு எங்கு வந்தாலும் அது தவறான அமைப்பாகவே அமையும். 

வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பூஜையறை

* வடகிழக்கு பூஜையறை மிக மிகத் தவறான அமைப்பு. அதனுடைய கெடுதலான பலன் அனைத்தும் வீட்டின் ஆண்கள் மீதே படும். 

* தென்மேற்கு பூஜையறை என்பதும் தவறான அமைப்பே. இங்குப் பூஜையறை வந்தால் ஆண்கள், பெண்கள் இருவருமே பாதிப்புக்குள்ளாவார்கள். பாதிப்பு என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டாமா? 

1. ஆண்கள் நல்ல வேலைக்கு போகமுடியாத நிலை ஏற்படும். சில சமயம் ஆண்களுக்கு வேலையே அமையாமல் கூட போக நேரிடும். 

2. குடும்ப உறவுகளில் பிரிவினை ஏற்படும். அதாவது தந்தை, மகன் உறவு பாதிப்பு, கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உருவாகும். 

3. உடல் நிலை பாதிப்பு, விபத்து போன்றவைகள் கூட ஏற்பட வாய்ப்புண்டு.

4. குழந்தை பிறப்பு தள்ளிப் போதல், தத்து எடுக்கும் சூழ்நிலை கூட ஏற்படலாம்.

5. வியாபாரத்தில் நஷ்டம் அல்லது வியாபாரம் தொடர்ந்து செய்ய முடியாமல் போவது.

6. கடன் சுமை, கொடுக்கல் வாங்கலில் சிக்கல்.

7. வெளியூர் அல்லது வெளிநாட்டிலேயே கணவன் தங்கிவிடுவது. 

8. பில்லி சூனியம், செய்வினை மீது தேவையற்ற நம்பிக்கை வைப்பது.

9. வீட்டில் உள்ள பெண்கள் எப்பொழுதுமே கோயில் கோயிலாகச் சுற்றுவது.

10. தன்னுடைய சொத்தை அல்லது தன்னுடைய முழு வருமானத்தை கோவிலுக்கோ, மடத்துக்கோ எழுதி வைப்பது போன்றவைகள் நடக்க நேரிடும்.

வீட்டில் பூஜையறை வைக்கும் முன்பு அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் ஆலோசனைக்குப் பிறகு வைப்பது சிறப்பு. தவறான இடத்தில் பூஜையறையை அமைத்துப் பல குடும்பங்களில் ஏற்படும் துன்பத்திற்குக் காரணம் பூஜையறையை சரியாக அமைப்பதை அவர்கள் அறிந்திடாததேயாகும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com