இழந்த பதவியை மீட்டுத்தரும் முருகன் விரதம்

ஆறுமுக கடவுளான முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களும்,
இழந்த பதவியை மீட்டுத்தரும் முருகன் விரதம்


ஆறுமுக கடவுளான முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களும், கிருத்திகை, சஷ்டி திதியும் உகந்தவை. அதுமட்டுமன்று கந்தசஷ்டி, தைப்பூசம் நாட்களிலும் முருகனுக்குச் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. 

வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கு உகந்தது. வெள்ளிக்கிழமைகளில் முருகனை வழிபட்டால் இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம். வேண்டுதல் நிறைவேற வெள்ளிக்கிழமை அன்று காலையில் நீராடி முருகன் படத்திற்கு மாலை அணிவித்து விரதத்தைத் தொடங்க வேண்டும். அன்றை தினம் எந்த கெட்ட வார்த்தைகளையும் உச்சரிக்க கூடாது. கந்தசஷ்டி கவசம், கந்த புராணம் படிக்க வேண்டும். ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் இருக்க வேண்டும்.

அப்படி இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கும், முருகனுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த விரதத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் இழந்த பதவியை மீண்டும் பெறலாம். விரைவில் நல்ல பலன் தருவதைக் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com