உங்கள் இராசிக்குப் பணவரவு எப்படி இருக்கும்?

நாம் ஒவ்வொருவருக்கும் வசதியுடன், பணக்காரர்களாக வாழ வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். சிலர் பிறவி பணக்காரர்களாகவும், சிலர் கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர்களாகவும் இருப்பர்.....
உங்கள் இராசிக்குப் பணவரவு எப்படி இருக்கும்?

நாம் ஒவ்வொருவருக்கும் வசதியுடன், பணக்காரர்களாக வாழ வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். சிலர் பிறவி பணக்காரர்களாகவும், சிலர் கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவர்களாகவும் இருப்பர். பலரின் கடின உழைப்பு வீணாகிப் போகும் சூழ்நிலையும் ஏற்படும். ஒருவரின் வாழ்க்கைமுறை அவரவர் தசாபுத்தி மற்றும் கிரகநிலை அடிப்படையிலேயே அமைகின்றது.

சரி, ஜோதிட ரீதியாக உங்கள் ராசிக்கான பணவரவு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இணையானவர்கள் யாரும் இல்லை எனலாம். எதிலுமே வெற்றி பெறும் யோகம் கொண்டவர் இவர். இதனால் தான் ராசிகளில் முதல் ராசியாக மேஷம் விளங்குகின்றது. இவரது பணப்புழக்கம் எப்போதும் மிகச் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்
பணத்தைக் கடவுளாக நினைப்பவர் ரிஷப ராசிக்கார்கள். இவரிடம் பணம் தங்காது. எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அவ்வளவு செலவு ஆகும். பணம் சம்பாதிப்பதில் வல்லவர். எனினும், எப்போதும் தன் பாக்கெட்டில் அதிகபட்சம் 100 ரூபாய்க்கு மேல் வைத்திருக்க மாட்டார்கள். தன் தேவைகளை மனைவியிடம் கேட்டே வாங்கிச் செல்வார்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களிடம் பணப்புழக்கம் அதிகமாக இருக்காது. அதே சமயம் பற்றாக்குறையும் ஏற்படாது. பிறப்பு முதல் இறப்பு வரை இவர்களது பணப்புழக்கம் ஒரே சீராக இருக்கும்.

கடகம்
இவர்கள் அதிகம் பயணிப்பவர்களாக இருப்பர். பயணத்தால் இவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பணத்தைச் சேமிக்கும் எண்ணம் இருக்கும். பணத்தட்டுப்பாடு இருந்தாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்.

சிம்மம்
பணப்புழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். எப்போது தேவைப்பட்டாலும் இவர்களுக்கு பணம் எந்த வகையிலோ கிடைத்துவிடும். ஆனால் இவர்களிடம் பணம் இருந்தாலும், பணத்தைச் செலவழிக்க பயப்படும் சுபாவம் கொண்டவர்.

கன்னி
இவர்கள் பண விஷயத்தில் சிக்கனத்தின் சிகரம் என்று சொல்லலாம். பணத்தினுடைய மகத்துவத்தை நன்றாகப் புரிந்து கொள்பவர். பணத்தைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும் என விருப்பமுடையவர். அதேசமயம் விழிப்பாகவும் இருப்பார்.

துலாம்
வியாபாரத்தில் இவர்களுக்கு அதிக லாபம் கிட்டும். இவர் செய்கின்ற தொழில் இவரை படிப்படியாக உயர்த்தும். எந்தக் காரியத்தை செய்தாலும் அதிக லாபம் விரைவிலேயே கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இவர்களது பணவரவு நன்றாக இருக்கும்.

விருச்சிகம்
தன்னுடைய தனித் திறமையின் மூலம் பணம் சம்பாதிக்கும் ஆற்றல் கொண்டவர் இவர்கள். எந்தக் காரியத்தையும் முழுவதுமாக முடித்தால் பணவரவு நிச்சயம். எங்கே சென்றாலும் அங்கிருந்து பணம் வரும். பணவரவால் இவர்கள் மகிழ்ச்சி காண்பார்கள்.

தனுசு
கொடுக்கல்-வாங்கல், வாங்குதல்-விற்றல் எல்லாமே இழுபறியாக இருக்கும். பணம் இருந்தால் இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பணம் செலவாவதைக் கண்டு கண்ணீர் வடிப்பர்.

மகரம்
தனது திறமையால் தனது லாபத்தை பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர் இந்த ராசிக்காரர். இவர்களது செலவை குறைக்க முடியாது. சாதாரண பண நடமாட்டம் இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தங்களது வீட்டு செலவைக் கூட புத்திசாலித்தனமாக குறைத்துவிடுவர். எப்போதும் பண நடமாட்டம் இருக்கும் நபராகவே கும்ப ராசிக்காரர் திகழ்வார். சொத்து சேரும் யோகம் உண்டு.

மீனம்
தன்னுடைய சொந்த காலில் நின்று பணத்தை சம்பாதிப்பவர் மீன ராசிக்கார்கள். பணம் தேவைப்பட்டால் உடனடியாக கிடைக்கும். பணம் இவர்களுக்கு சாதாரணமான ஒன்று. வியாபாரங்களில் ஏற்றத் தாழ்வு நிகழும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com