மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது ஏன்?

மாதவிடாய்க் காலங்களில் பெண்களின் உடல் அதிக சூடேறி ஒருவித வெப்பமாற்றம் அடைகின்றது.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது ஏன்?

மாதவிடாய்க் காலங்களில் பெண்களின் உடல் அதிக சூடேறி ஒருவித வெப்பமாற்றம் அடைகின்றது. இந்நேரங்களில் பெண்கள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யும் போது, வெப்ப மாற்றம் காரணமாக தெய்வ பிம்பத்தை பாதிக்கும் என்று அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது.

ஜீவ சக்தி நிறைந்த தெய்வீகத்திலும் இந்த மாற்றம் நிகழாமல் இருக்கவே மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்லப்படுகிறது.

பட்டுப்பூச்சிகளை வளர்க்குமிடத்தில் மாதவிடாய் ஆன பெண்கள் சென்றால், அங்குப் புழுக்கள் மாண்டு போவதாக விஞ்ஞான ரீதியாக நிரூபித்திருக்கின்றது. அதாவது, சிறு வெப்ப மாற்றமும் இப்புழுக்களைப் பாதிக்கின்றது என்று புரிந்து கொள்ளலாம்.

தன் உடலில் பட்டு நூலை உருவாக்கி வலைகள் உண்டாக்கி அதனுள் இருக்கும் புழுக்களைப் போலவே, கோயிலைப் பொறுத்தவரை இறையின் நிலையும். இவ்வாறு திவ்ய ஜீவ சக்தியை பாதிக்காமலிருக்கவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com