திருப்பதியில் வாடகை அறை வழங்குவதில் சிக்கல்: பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வாடகை அறை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதியில் வாடகை அறை வழங்குவதில் சிக்கல்: பக்தர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வாடகை அறை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமலையில் வாடகை அறை பெற விரும்பும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் புதன்கிழமை முதல் வாடகை அறை வழங்குவதில் தேவஸ்தானம் புதியமுறையை அறிமுகப்படுத்தியது.

இதற்காக திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகத்தில் 10 கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டன. இங்கு வாடகை அறை பெற விரும்பும் பக்தர்கள் தங்களின் பெயர், ஆதார் அட்டை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

முதலில் முன்பதிவு செய்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாடகை அறைகள் ஒதுக்கப்படுகிறது. இதுகுறித்த தகவல் சம்பந்தப்பட்டவர்களின் செல்லிடப்பேசிக்கு அனுப்பப்படும். அவர்கள், மத்திய விசாரணை அலுவலகத்துக்கு சென்று, தங்களுக்கான வாடகை அறையை பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்தது. இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை 5 மணியிலிருந்து சர்வர் பழுது ஏற்பட்டது. இதனால், வாடகை அறை முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து, காலை 10 மணி வரை கணினிகள் இயங்காததால், வாடகை அறை பெற காத்திருந்த பக்தர்கள் பொறுமை இழந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், சர்வர் பழுது விரைந்து நீக்கப்பட்டு, காத்திருந்த பக்தர்களுக்கு வாடகை அறை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களில் சிலர் கூறியதாவது: வாடகை அறை பெற புதியமுறையை தேவஸ்தானம் அமல்படுத்தியுள்ளது. இதற்கான மென்பொருளை முதலில் சோதனை முறையில் பரிசோதித்து, அதன் மூலம் சிக்கல் ஏதும் ஏற்படாத வகையில் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், திடீரென்று புதியமுறையை நடைமுறைப்படுத்தி, பக்தர்களை அவதிக்குள்ளாக்கியுள்ளனர்.

திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அனில்குமார் சிங்கால் வட இந்தியாவைச் சேர்ந்தவர். அவருக்கு இங்கு நிலவும் சூழ்நிலை குறித்து தெரிய வாய்ப்பில்லை என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com