எந்த திதிகளில் பிறந்தவர்கள், கடவுளுக்கு என்ன படைத்து வழிபடலாம்?

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார்.
எந்த திதிகளில் பிறந்தவர்கள், கடவுளுக்கு என்ன படைத்து வழிபடலாம்?

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும், சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இதன்படி எந்த திதிகளில் பிறந்தவர்கள் கடவுளுக்கு என்ன படைத்து வணங்கலாம் என்று பார்ப்போம்.

• பிரதமை அன்று பிறந்தவர்கள் கடவுளுக்கு நெய் படைத்து வழிபட வேண்டும்.

• துவிதியை அன்று பிறந்தவர்கள் சர்க்கரை படைத்து வழிபடலாம்.

• திருதியை அன்று பிறந்தவர்கள் பால் படைத்து வழிபட வேண்டும்.

• சதுர்த்தி அன்று பிறந்தவர்கள் பட்சணம் படைத்து வழிபடலாம்.

• பஞ்சமி அன்று பிறந்தவர்கள் வாழைப்பழம் படைத்து வழிபட வேண்டும்.

• சஷ்டி அன்று பிறந்தவர்கள் தேன் படைத்து வழிபட வேண்டும்.

• சப்தமி அன்று பிறந்தவர்கள் வெள்ளம் படைத்து வழிபட வேண்டும்

• அஷ்டமி அன்று பிறந்தவர்கள் தேங்காய் படைத்து வழிபடலாம்.

• நவமி அன்று பிறந்தவர்கள் நெற்பொறி படைத்து வழிபடலாம்.

• தசமி அன்று பிறந்தவர்கள் கருப்பு எள் படைத்து வழிபட வேண்டும்.

• ஏகாதசி அன்று பிறந்தவர்கள் தயிர் படைத்து வழிபட வேண்டும்.

• துவாதசி அன்று பிறந்தவர்கள் அவல் படைத்து வழிபட வேண்டும்.

• திரயோதசி அன்று பிறந்தவர்கள் கடலை படைத்து வழிபடலாம்.

• சதுர்த்தி அன்று பிறந்தவர்கள் சத்துமாவு படைத்து வழிபட வேண்டும்.

• பௌர்ணமி / அமாவாசை அன்று பிறந்தவர்கள் பாயாசம் படைத்து வழிபட வேண்டும்.

இவ்வாறு நீங்கள் பிறந்த திதிகளில் உங்கள் இஷ்ட தெய்வத்துக்கு இதனை படைத்து வணங்கினால் துன்பத்திலிருந்து விடுபட்டு செல்வ செழிப்புடன் வாழலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com