ஸ்ரீரங்கத்திலிருந்து திருப்பதிக்கு வஸ்திர மரியாதை

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயிலில் இருந்து திருப்பதி திருமலை வேங்கடமுடையானுக்கு ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி சனிக்கிழமை காலை வஸ்திர மரியாதை எடுத்துச் செல்லப்பட்டது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயிலில் இருந்து திருப்பதி திருமலை வேங்கடமுடையானுக்கு ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி சனிக்கிழமை காலை வஸ்திர மரியாதை எடுத்துச் செல்லப்பட்டது.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் திருப்பதிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. திருமலையில் ரெங்கநாதர் 40 ஆண்டுகாலம் எழுந்தருளியிருந்தார். இதை நினைவுகூரும் வகையில், 2004ளம் ஆண்டு முதல் திருப்பதியிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு ஒவ்வொரு கைசிக ஏகாதசியன்று ரெங்கநாதர், ரெங்கநாச்சியார், ராமானுஜர் ஆகியோருக்கு வஸ்திர மரியாதை குடைகள் மற்றும் மங்களப் பொருட்கள் வரும்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதி வேங்கடமுடையானுக்கு ஒவ்வொரு ஆனி ஆஸ்தான தினத்தன்று வஸ்திர மரியாதை பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகிறது.
நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) ஆனி வார ஆஸ்தானம். இதற்காக சனிக்கிழமை காலை கோயிலில் உள்ள ரெங்கவிலாஸ மண்டபத்திலிருந்து திருப்பதிக்கு கொண்டுசெல்லப்படும் வஸ்திர பொருட்கள் மற்றும் மங்களப் பொருட்களை தட்டில் வைத்து கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் யானை ஆண்டாள் மீதும் அமர்ந்தும், கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள் டாக்டர் சீனிவாசன், கவிதா ஆகியோர் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பிறகு, திருப்பதிக்கு காரில் வஸ்திர பொருட்கள் முறையாக எடுத்துச்செல்லப்பட்டன. அவற்றை, முறைப்படி திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தினர் ஒப்படைக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com