திருத்தணியில் இன்று ஆடிக் கிருத்திகை கொண்டாடவில்லையாம்...!

ஆடிக்கிருத்திகை விழாவுக்காக திருத்தணிக்கு வந்த பக்தர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி இருப்பார்கள் அல்லவா...
திருத்தணியில் இன்று ஆடிக் கிருத்திகை கொண்டாடவில்லையாம்...!

தமிழகத்தில் உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விளங்குகின்றது. அவ்வாறு பிரசித்தி பெற்ற திருக்கோயிலில் இன்று ஏன் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடவில்லை?

ஆடிக்கிருத்திகை விழாவுக்காக திருத்தணிக்கு வந்த பக்தர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி இருப்பார்கள் அல்லவா...

திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும், ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நாள் ஆடிக்கிருத்திகை விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, மூன்று நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

ஆனால், இந்த வருடம் ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை வருவதால் திருத்தணியில் இன்று ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடவில்லையாம். அதற்குப் பதிலாக ஆடி 30-ம் நாள் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று வரும் ஆடிக்கிருத்திகை வெகு விமரிசையாகக் கொண்டாட உள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் சிவாஜி கூறுகையில்,
பொதுவாகவே ஆடி மாதத்தில் ஒரு கிருத்திகை விழா தான் வரும். ஆனால், நடப்பாண்டில் ஆடி மாதத்தில், ஜூலை 19-ம் தேதியும், ஆகஸ்ட்15-ம் தேதியும் என இரண்டு கிருத்திகை தினங்கள் வருகிறது. ஆகையால், பக்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நமது கோயிலின் ஐதீகப் படி, ஆகஸ்ட் 15-ம் தேதி தான் ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. மேலும், மூன்று நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெறும் என்றார்.

நிகழ்ச்சி நிரல் விவரம்
13.08.2017 ஆடி அஸ்வினி

14.08.2017 ஆடிப் பரணி

15.08.2017 ஆடிக் கிருத்திகை மற்றும் முதல்நாள் தெப்பம்

16.08.2017 இரண்டாம் நாள் தெப்பம்

17.08.2017 மூன்றாம் நாள் தெப்பம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com