ஆடி அமாவாசை, பிதுர் பூஜை

தஞ்சை மாவட்டம்,  திருவையாறு வட்டத்தில் உள்ளது திருப்பூந்துருத்தி.  இது திருநாவுக்கரசரின்

தஞ்சை மாவட்டம்,  திருவையாறு வட்டத்தில் உள்ளது திருப்பூந்துருத்தி.  இது திருநாவுக்கரசரின் தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரியின் தென்கரையில் உள்ள பதினோறாவது  திருத்தலமாகும்.  

அவர் இங்கு திருமடம் ஒன்று அமைத்து பல காலம் தங்கி முதன் முதலில் உழவாரத் திருத்தொண்டு தொடங்கி செய்து வழிபட்ட பெருமையுடைய தலம்.  திருஞான சம்பந்தரை பூந்துருத்தி எல்லையில் நாவுக்கரசர் எதிர்கொண்டு அழைத்து அவர் வரும் பல்லக்கை தன் தோளில் சுமந்த ஸ்தலம்.

காசிப முனிவரின் கடுந்தவத்திற்கு மகிழ்ந்து அவருக்கு இறைவன் இத்தலத்தில் உள்ள ஆதிவிநாயகர் சந்நிதியில் உள்ள கிணற்றில் 13 புண்ணிய கங்கையையும் பொங்கி எழச் செய்து விசாலாட்சி சமேத விஸ்வநாதராகக் காட்சி தந்த பெருமைப்பெற்றது.  

பிதுர்சாபம் நீங்கவும், உலக நன்மையைக் கருதியும், ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசைத் தினத்தன்று இத்தலத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரர் திருக்கோயிலில் பிதுர்பூஜை சிறப்பு வழிபாடு, விசேஷ பூஜை, ஹோமங்களுடன் நடைபெற்று வருகின்றது.  

பக்தர்கள் நாடெங்கிலும் இருந்து வந்து இந்த பரிகார பூஜைகளில் பங்கேற்று பயன்பெறுகின்றனர்.  இவ்வாண்டு, இவ்விழா ஜுலை 23, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகின்றது.  

தொடர்புக்கு : ஜி. பத்மநாபன் - 98944  01250. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com