உங்கள் ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி பரிகாரங்கள்!

ராகு கேது பெயர்ச்சி வரும் வியாழக்கிழமை அன்று சுக்ல சதுர்த்தியும், உத்திர நட்சத்திரம், சித்த யோகம் கொண்ட நாளில் துலா லக்னத்தில் ராகு பகவான் சிம்ம இராசியில் இருந்து கடக இராசிக்கும்....
உங்கள் ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி பரிகாரங்கள்!

ராகு கேது பெயர்ச்சி வரும் 27.07.2017 - வியாழக்கிழமை அன்று சுக்ல சதுர்த்தியும், உத்திர நட்சத்திரம், சித்த யோகம் கொண்ட நாளில் துலா லக்னத்தில் ராகு பகவான் சிம்ம இராசியில் இருந்து கடக இராசிக்கும், கேது பகவான் கும்ப இராசியில் இருந்து மகர ராசிக்கும் இடம் பெயர்கின்றது.

இந்தப் பெயர்ச்சியின் போது எந்த இராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்று தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் துல்லியமாக கணித்து நமக்கு வழங்கியுள்ளார்.

மேஷ இராசி
மேஷ இராசிக்காரர்கள் முருகன் வழிபாடு செய்யலாம். தினசரி கந்தசஷ்டி பாராயணம் செய்யலாம். செவ்வரளி மலரை ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்யலாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காளி வழிபாடு செய்யலாம். சனிக்கிழமையன்று அனுமனுக்குத் தீபம் ஏற்றி வழிபட மன நிம்மதி கிடைக்கும்.

ரிஷப இராசி
பெருமாள் கோயிலுக்கு சென்று வருவதும், அபிராமி அந்தாதி சொல்லி அம்பாளை வழிபடுவதும் குடும்பத்தில் அமைதி நிலவும். செவ்வாய் அன்று கேது பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு தீபம் ஏற்றுதல் நலம். விநாயகருக்கு அருகம்புல் சாத்துவதால் பிரச்சனைகள் குறையும்.

மிதுன இராசி
இந்த இராசிக்கார்கள் சனிக்கிழமைகளில் நவக்கிரங்களுக்கு அர்ச்சனை செய்யலாம். பௌர்ணமி அன்று அம்மன் சந்நதிக்கு சென்று வழிபடலாம். பெருமாள் கோயிலுக்கு சென்று வரலாம். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். தினமும் வெறும் வயிற்றில் துளசி இலையைச் சாப்பிட்டு வந்தால் எதிர்மறை எண்ணங்கள் உங்களை விட்டு அகலும்.

கடக இராசி
ஞாயிறு அன்று இராகு காலத்தில் பைரவருக்குத் தீபம் ஏற்றி வழிபடலாம். வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வர பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். தினமும் அம்மன் வழிபாடு செய்யலாம். வளர்பிறை சஷ்டியில் இருந்து தேர்பிறை சஷ்டி வரைக்கும் உள்ள 15 நாட்களில் தெரியும் சந்திர பகவனை கை கூப்பி வணங்கி வரலாம்.

சிம்ம இராசி
சிம்ம ராசிக்காரர்கள் கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகனுக்கு தீபம் ஏற்றலாம். சனிக்கிழமைகளில் துளசி அர்ச்சனை செய்யலாம். சூரிய நமஷ்காரம் செய்து வந்தால் இயற்கையான பலன் கிட்டும். கோதுமையைத் தூள் செய்து சர்க்கரை கலந்து காக்கைக்கு கொடுப்பது ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.

கன்னி இராசி
இந்த இராசிக்காரர்கள் வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யலாம். பிரதோஷத்தன்று நந்தியை வணங்கி நற்பலன்களைப் பெறலாம். வெள்ளியன்று ராகு காலத்தில் துர்கை வழிபாடு சிறந்தது. காவல் தெய்வ கோயிலுக்குச் சென்று வரலாம், மரிகொழுந்து இலையை அம்பாளுக்கு அல்லது பெருமாளுக்கு கொடுத்து வந்தால் யோகமான பலன் கிடைக்கும்.

துலாம் இராசி
இவர்கள், சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மர் வழிபடுவதும், வியாழக்கிழமைகளில் குரு, வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை தரும். புவனேஷ்வரி அஷ்டகம் சொல்லி வழிபடுவதும், வெண் தாமரை மலரை அம்மனுக்குப் படைப்பதும் நல்ல பரிகாரமாக இருக்கும்.

விருச்சிக இராசி
விருச்சிக இராசிக்காரர்கள் பௌர்ணமி அன்று சிவன் கோயில்களில் கிரிவலம் வரலாம்.  செவ்வாய்க்கிழமைகளில் முருகன் வழிபாடு செய்யலாம். தினமும் அம்மன் ஆலயத்திற்கு செல்வது, செவ்வரளி மற்றும் மல்லிகைப்பூ மலர் அம்மன் ஆலயத்திற்குக் கொடுத்து வருவது நல்ல பலன் கிடைக்கும். கந்த சஷ்டி பாராயணம் செய்து வந்தால் மனஅமைதி கிடைக்கும்.

தனுசு இராசி
இந்த ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமையன்று நாக வழிபாடு செய்யலாம். பிரதோஷத்தன்று சிவனுக்கு நெய் தீபம் ஏற்றி வர வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். அருகில் உள்ள சித்தர்கள் ஆலயத்திற்குச் சென்று வருவதால் நல்ல பலன் கிடைக்கும். முல்லை மலர் அல்லது மஞ்சள் சாமந்தி மலரை தட்சிணாமூர்த்திக்கு கொடுத்து வழிபடுதல் நல்ல பரிகாரமாக இருக்கும்.

மகர  இராசி
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு செய்யலாம். தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு தீபம் ஏற்றி வரச் சங்கடங்கள் அகலும். காவல்தெய்வம் கோயிலுக்குச் சென்று வரலாம். சிவன் கோயிலுக்கு அல்லது அருகில் உள்ள ஆலயத்திற்கு எண்ணெய் வாங்கிக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.

கும்ப இராசி
இந்த இராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமையில் கேதுவுக்கு அர்ச்சனை செய்யலாம். வெள்ளிக்கிழமைகளில் லட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வர நற்பலன்கள் அதிகரிக்கும். அம்மன் ஆலயம், நவக்கிரங்களை வழிபடுவதும், மரிகொழுந்து அல்லது துளசியை பெருமாள் கோயிலுக்கு கொடுப்பதும் நல்ல பரிகாரமாக இருக்கும்.

மீன இராசி
மீன இராசிக்காரர்கள் சனிக்கிழமை பெருமாளுக்கு அர்ச்சனை செய்தல் சிறப்பு. வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனை வழிபட்டு வந்தால் பிரச்னைகள் நீங்கி நன்மைகள் கிடைக்கும். சிவன் ஆலயம், நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வரலாம். மீன்களுக்கு உணவளிப்பது நல்ல பரிகாரமாகும். தட்சிணாமூர்த்தி ஆலயத்திற்கு முல்லை அல்லது மஞ்சள் நிற மலர்களை அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com