ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா

பெரும்பாலும் அம்மன் கோயில்களில் பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவதை கேள்விபட்டியிருக்கிறோம். ஆனால் இந்த அம்மன் கோயிலில் ஆண்கள் தான் பொங்கல் வைப்பார்களாம்.
ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா

பெரும்பாலும் அம்மன் கோயில்களில் பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவதை கேள்விபட்டியிருக்கிறோம். ஆனால் இந்த அம்மன் கோயிலில் ஆண்கள் தான் பொங்கல் வைப்பார்களாம்.

இது என்னடா அதிசயம்! ஆமாங்க....ராசிபுரத்தில் உள்ள பொங்களாயி அம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைத்து, கிடா வெட்டி அம்மனை வழிபட்டுச் செல்வார்களாம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது மலையாம்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு போதமலை மலையாள தெய்வம் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற பொங்களாயி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், ஆடி மாத திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில், இந்தாண்டுக்கான கோயில் திருவிழா கடந்த மாதம் 21-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இந்த விழாவில் ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு பொங்கல் வைத்து ஆடுகளைப் பலியிட்டு அம்மனை வழிபட்டனர். இந்த விழாவில் பெண்களுக்கு அனுமதி இல்லையாம்.

இதன் முக்கிய நிகழ்வான நேற்று அம்மனுக்குச் சிறப்பு பூஜையும், அலங்காரமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பொங்களாயி அம்மனுக்கு ஆடு ஒன்று பலியிடப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காகக் கொண்டு வந்த 140 கிடாக்களை வெட்டி அம்மனுக்குப் படைக்கப்பட்டது. பின்பு அவற்றை அங்கேயே கறியாக்கி சமையல் செய்து, அதிகாலையில் அனைவருக்கும் விருந்து வைக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 2,000-த்திற்கும் அதிகமான ஆண் பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com