வீட்டில் லட்சுமி கடாட்சம் தங்க இதெல்லாம் செய்யாதீங்க....

நம் வீட்டில் திடீரென ஏற்படும் பிரச்னைகள், உடல் நலக்குறைவு, விரயச் செலவு, குடும்பச் செலவு மனக் குழப்பம் போன்ற நிகழ்வுகள் நிகழ்கின்றதா?
வீட்டில் லட்சுமி கடாட்சம் தங்க இதெல்லாம் செய்யாதீங்க....

நம் வீட்டில் திடீரென ஏற்படும் பிரச்னைகள், உடல் நலக்குறைவு, விரயச் செலவு, குடும்பச் செலவு மனக் குழப்பம் போன்ற நிகழ்வுகள் நிகழ்கின்றதா? அப்படி நேர்ந்தால் சுதாரித்துக்கொண்டு உங்களது செல்வத்தை தக்க வைத்துக்கொள்ள, இந்த அறிகுறிகளை அறிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

• வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுதல்.

• தலைமுடி கற்றைகள் தரையில் விழுந்து சுழன்று கொண்டேயிருந்தல்.

• சுவர், ஜன்னல், வாசல்கள் மேல் தூசி ஒட்டடைகள் சேர்ந்து இருந்தால்.

• சூரியன் மறைந்த பின் வீட்டைப் பெருக்குதல், துடைத்தல்.

• பெண்கள் தினமும் தலைக்குக் குளிப்பவர்களைத் தவிர மற்றவர்கள் செவ்வாய், வெள்ளி தவிர மற்ற நாளில் தலைக்குக் குளித்தல்.

• வீட்டுக்குழாய்களில் தண்ணீர் சொட்டுதல்.

• வீட்டில் கரையான் புற்று இருத்தல்.

• அதிக நேரம் ஈரத் துணிகளை போட்டு வைத்தல்.

• பூராண், தேள் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டில் உலாவுதல்.

• உணவுப் பொருட்களை வீணடித்தல்.

• உப்பு, பால், சர்க்கரை, அரிசி போன்றவற்றை அடியோடு தீரும் வரை வாங்காமல் இருத்தல் மற்றும் அதன் பாத்திரங்களை கழுவி வைத்தல்.

• குறைந்த பட்ச வெளிச்சம் கூட இல்லாமல் வீட்டை இருட்டாக வைத்தல்.

• சமையல் அறையில் கழுவப்படாத எச்சில் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே கிடந்திருத்தல்.

• வீட்டில் எப்போதும் இனிமையான இசையைக் கேட்காமல் கொடூர இசையைக் கேட்டல்

• இல்லை, இல்லை, வரவே வராது வேண்டாம் வேண்டாம், அய்யோ, அடப்பாவி போன்ற வார்த்தைகளை அதிகம் உச்சரித்தல்.

• வாசலில் செருப்பு, துடைப்பம் போன்றவற்றை படுக்கைவாட்டில் அலங்கோலமாக வைத்திருத்தல்.

இந்த மாறியான ஒழுங்கீனமற்ற செயல்களை வீட்டில் அறவே தவிர்க்க வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் லட்சுமி கடாட்சம் உள்ளது என்பதை நினைவில் கொண்ட செயல்பட வேண்டியது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com