இதைச் செய்தால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்!

கோயிலுக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனக்கவலைகள் இருக்கும். நம் மனதில் இருக்கும்....
இதைச் செய்தால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்!

ஒவ்வொரு கோயிலிலும் மூலவர் என்று ஒருவர் உண்டு. அவரைச் சுற்றி நிறைய உப தெய்வங்கள் இருக்கும். கோயிலுக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனக்கவலைகள் இருக்கும். நம் மனதில் இருக்கும் குறைகளை இறைவனிடம் கூறி, குறைகள் நீங்கி வளமான வாழ்வு அமைய வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுவார்கள்.

இவ்வாறு நம் மனக்குறைகளைக் கடவுளிடம் கூறும் போது சில நெறிமுறைகளை மனதில் கொண்டு, அதன்படி இறைவனை வணங்கி வேண்டினால் நாம் வேண்டியது நிறைவேறும்.

• கோயிலினுள் சென்றதும் முதலில் கொடிமரத்தை வணங்க வேண்டும்.

• அதன் பின் மூலவரை வணங்க வேண்டும். பின்பு உப தெய்வங்களை வணங்கி வலம் வர வேண்டும்.

• அவ்வாறு உப தெய்வங்களை வணங்கி வலம் வரும்போது இருக் கைகளை கூப்பி, கைகளை முகவாயில் தாங்கி, கைகளை மார்பு பகுதியில் வைத்து வணங்கி வேண்டுதலைச் சொல்ல வேண்டும்.

• வேண்டுதலைச் சொல்லும்போது மௌனமாக மனதுக்குள் மட்டுமே சொல்லி வேண்ட வேண்டும்.

• கண்களை மூடாமல் வேண்ட வேண்டும். கண்களை மூடிக்கொண்டு வேண்டுதல் கூடாது.

• உப தெய்வங்கள் உள்ள இடத்தில் கை கூப்பி வணங்கி வர வேண்டுமே தவிர, கீழே விழுந்து வணங்கக்கூடாது.

• மூலவர் சந்நிதானத்தில் விழுந்து வணங்கக்கூடாது.

• எல்லாத் தெய்வத்தையும் வணங்கிவிட்டு மீண்டும் கொடிமரம் பக்கம் வர வேண்டும்.

• கொடிமரம் முன்னால் நின்று மூலவரைப் பார்த்து வணங்கி சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்க வேண்டும்.

• கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கிய கோயிலில் வடக்கு நோக்கி தலையை வைத்து வணங்க வேண்டும்.

• வடக்கு அல்லது தெற்கு பார்த்த கோயில்களில் கிழக்கு நோக்கி தலை வைத்து வணங்க வேண்டும்.

இவ்வாறு வணங்கிவிட்டு சிறிது நேரம் படிகளில் அமர வேண்டும். அமர்ந்தபடியே உங்கள் வேண்டுதல்களை மௌனமாகக் கோரிக்கையாக சொல்லலாம். அதன்பின் கோயிலை விட்டு வெளியே வந்த பின்பு கோபுரத்தை நோக்கி வணங்க வேண்டும். கோபுரத்தை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com