கிரகங்கள் கணவன்-மனைவி இடையே பிரச்னைகளை உண்டாக்குமா?

ஒருவருடைய ஜாதகத்தில் கிரகநிலை மாறுபடும் போது, அவரவர் தசாபுத்திக்கு ஏற்றவாறு கோசாரப்பபலன் அடிப்படையில் பலாபலன்கள் மாறுப்படும். அப்போது, ஜாதகருக்கு வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் நிகழ்வது இயல்பு.
கிரகங்கள் கணவன்-மனைவி இடையே பிரச்னைகளை உண்டாக்குமா?

ஒருவருடைய ஜாதகத்தில் கிரகநிலை மாறுபடும் போது, அவரவர் தசாபுத்திக்கு ஏற்றவாறு கோசாரப்பபலன் அடிப்படையில் பலாபலன்கள் மாறுப்படும். அப்போது, ஜாதகருக்கு வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் நிகழ்வது இயல்பு.

ஒரு சில குடும்பங்களில் கணவன் மனைவியிடையே காரணமின்றி பிரச்னைகள் உருவாகும். வாக்குவாதங்கள் அதிகரிக்கும். அனுசரித்துச் செல்ல முடியாத நிலையால் விவாகரத்து வரை போய் நிற்கும். அந்த வாழ்க்கை கடைசியில் நரகமாகத்தான் இருக்கும். பேசி தீர்த்துக் கொள்ள முடியாத பிரச்னை என்று ஒன்றும் இல்லை. ஆனால் விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாதவர்களுக்கு சின்ன பிரச்னைகள் கூட மலையளவு பெரியதாக இருக்கும்.

இதனால் பாதிக்கப்படுவது கணவன் மனைவி மட்டுமின்றி அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பமும்தான். இதனால், பிள்ளைகளுக்கும் நிம்மதி குறைவு, தீய பழக்கங்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை போன்றவை ஏற்படுகிறது. ஜோதிட ரீதியாக ஏன் இந்த பிரச்னை ஏற்படுகிறது என ஆராய்ந்தோமானால் பல்வேறு உண்மைகள் புலப்படுகிறது.

• ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 7-ம் அதிபதியும், சுக்கிரனும், சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற பாவகிரகங்களில் ஏதாவது இரண்டு கிரகங்களின் சேர்க்கை பெற்று அமைவது நல்லதல்ல. இப்படி பாவகிரக சேர்க்கை பெற்றிருந்தால் இந்தக் கிரகங்களின் தசாபுத்திகள் வரும் போது கணவன், மனைவியிடையே ஒற்றுமை குறையும்.

• கிரகங்களில் ஞானகாரகன், மோட்சகாரகன் என வர்ணிக்கப்படுவர் கேது பகவான். அதிலும் குறிப்பாக 1,2,8-ல் கேது அமைந்திருந்தாலும், 7-ம் அதிபதி கேதுவின் நட்சத்திரத்தில் அமையப் பெற்றிருந்தாலும் கேதுவின் புத்தி காலங்களில் அதிக பாதிப்புகள் உண்டாகிறது.

• சர்ப கிரகங்களான ராகுவும், கேதுவும் பின்னோக்கி சஞ்சரிக்கக்கூடியவர்கள். கோட்சார ரீதியாக ராகு, கேது ஒரு ராசியில் ஒன்றரை வருடங்கள் தங்குவார்கள். ஜென்ப லக்னத்திற்கு 1,7, 2,8-ல் சஞ்சரிக்கும் போது ராகு, கேது ஒன்றரை வருடங்கள் சஞ்சரிக்கும் காலங்களில் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகளையும், வீண் பிரச்னைகளையும் உண்டாக்குவார்.

• குறிப்பாக இதில் யாருக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது எனப் பார்த்தோமானால் அஸ்வினி, திருவாதிரை, மகம், சுவாதி, மூலம், சதயம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அதிகப்படியான பாதிப்புகள் நெருக்கடிகள் உண்டாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com