ஜிஎஸ்டி வரியில் இருந்து தப்பித்தது திருப்பதி லட்டு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு மற்றும் முடி மீது அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர நிதியமைச்சர் யனமாலா ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரியில் இருந்து தப்பித்தது திருப்பதி லட்டு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு மற்றும் முடி மீது அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர நிதியமைச்சர் யனமாலா ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, நாள் முழுவதும் அன்னதானம், சிற்றுண்டி, பால், காபி, டீ, மோர் ஆகியவற்றை இலவசமாக அளித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.

இதற்கு முன்னர் சேவை வரியிலிருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜிஎஸ்டி வரிவிதிப்பு இனி திருப்பதி தேவஸ்தானத்துக்கும் பொருந்தும் என அறிவித்தது. இதனால், திருமலையில் உள்ள வாடகை அறைகள், லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகின.

இதைதொடர்ந்து, தேவஸ்தானம் இதுகுறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. பின்னர், இறுதியாக மத்திய அரசு முடி அகற்றுவதற்கும், பக்தர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை லட்டுவில் இருந்தும் விலக்கு அளித்துத் தீர்ப்பளித்தாக, ஆந்திர நிதியமைச்சர் யனமாலா ராமகிருஷ்ணன் விஜயவாடாவில் அறிவித்துள்ளார். மேலும் தங்கும் அறையின் வாடகை ரூ.1000-த்திற்கு மேல் 12% வரி விதிக்கப்படும் என்று ஆந்திர அமைச்சர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com