நீங்கள் சாத்வீகமான இராசிக்காரர்களா?

மிதுனம், துலாம், கும்பம், தனுசு இவை சாத்வீகமான இராசிகளாக விளங்குகின்றன. சாத்வீகம் என்பது....
நீங்கள் சாத்வீகமான இராசிக்காரர்களா?

மிதுனம், துலாம், கும்பம், தனுசு இவை சாத்வீகமான இராசிகளாக விளங்குகின்றன. சாத்வீகம் என்பது பொறுமையும், நிதானமும் கொண்டு நிகழ்காலத்தை தனக்கென்று பயன்படுத்திக் கொள்வது சாத்வீகமாகும்.

இதில் மிதுனத்தின் அதிபதி புதன் சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரிக்கக்கூடியவர் என்றாலும் சமயோசிதமாக செயல்படக்கூடியவர். புதன் எந்த இடத்திலும் இடத்திற்கு தகுந்தார்போன்று அரங்கேற்றி அலங்கரித்துக் கொள்வார். சற்று வேகமான இடமாக மிதுனம் விளங்கினாலும் துணையின்றி ஒருபோதும் துணிவு இல்லாதது. ஆகையால் சகிப்புத் தன்மை கொண்டு சமயம் பார்த்து தன் காரியங்களை செயல்படுத்திக் கொள்ளும்.

துலாம் மற்றவர்களின் நலன் கருதுவதில் தனித்துவம் பெற்ற இடம் என்றாலும் சுக்கிரனின் செயல்பாடுகள் ஓய்வில்லா செயல்பாடுகளைக் குறிக்கும். இங்கு தன்னைச் சார்ந்தவர்களின் நிலையை அனுசரித்தே நடந்து கொள்ளும். வாழ்வியல் போராட்டங்கள் அதிகம் இருந்தாலும் நிதானமாகப் போராடி தனக்கென்று ஒரு நிலையை தக்கவைத்துக் கொள்வதில் துலாம் தனித்துவம் பெற்றதாகத் திகழ்கின்றது. இயல்பாக எதார்த்தமாக வாழ்வின் சூழலைக் கொண்டு மேன்மை அடையும். ஒரு சுற்றத்தில் அல்லது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாது செயல்படும். இந்த வீட்டில் நின்று தசாபுத்தி நடத்தும் கிரகங்கள் சாத்வீகமான நிலையை அடைவதைக் காணலாம். நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

கும்பத்தின் அதிபதி சனி பகவான். அலட்டிக் கொள்ளாத அனுக்கிரக அனுபூதியாகையினால் இந்த இடத்தில் இருக்கும் இராசிகளின் போக்கு ஒரே சீராக இருப்பதோடு ஒவ்வொரு காலத்தையும் தன் மனக்கண்ணால் அளந்து கொண்டு சமயத்தை சாதகமாகும் பக்குவம் நிறைந்த நிறைவும் இந்த வீட்டிற்கு உண்டு.

மிதுனம், துலாம், கும்பம் இந்த இராசிகள் காற்று தத்துவமாகையால் ஒவ்வொரு காலமும் வெவ்வேறான பயன்களை அடைய வழிவகுக்கும். எப்போதும் மற்றவர்களைச் சார்ந்தும், தன்னைச் சார்ந்தவர்களின் மூலமாகத்தான் வெளிப்பாடு தோன்றும். சாத்வீக போக்கில் காரிய அனுகூலம் காணும்.

தனுசு இராசியின் அதிபதி குரு பகவான். சாத்வீக போக்கு உடையவர். காலத்தைக் கனிய வைப்பதில் அவருக்கு நிகர் அவரே. அவருடைய செயல்பாட்டுக்கு வரும் காலம் பூரணமான நிலையை கொடுக்கும் என்றாலும். நல்லவைகளை எடுத்துக் கொடுத்து பரிபூரணாதிகளை கொடுப்பதில் வல்லவர். குழந்தைப் பருவத்தில் இருந்து நாற்பது வயதைக் கடக்கும் காலம் வரை ஓர் ஆன்மாவை மேன்மை
அடையச் செய்வதில் குருவுக்கு அதிக பங்குண்டு. அவர் கைக்கொள்ளும் கொள்கைகளில் சாத்வீகமும் ஒன்று. இறைநிலை மூலமாகத்தான் எல்லாவற்றையும் கொடுப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com