தானமும் அவற்றினால் ஏற்படும் பலாபலன்களும்

தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது நமக்கு மிஞ்சியது போக...
தானமும் அவற்றினால் ஏற்படும் பலாபலன்களும்

தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது நமக்கு மிஞ்சியது போக, மற்றவற்றை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள் என்று கூறினார்கள். அத்தகைய தானங்கள் பல வகைப்படும். என்னென்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

• அன்னதானம் - விரும்பிய உலகத்தில் சுகித்திருப்பார்.

• கோ தானம் - கோலோகத்தில் வாழ்வர்.

• பசு கன்றினும் சமயம் தானம் - கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.

• குடை தானம் - 1000 ஆண்டுகள் வருண லோகத்தில் சுகம் அனுபவிப்பார்.

• தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமக்காளம், பாய் தலையணை இவகளில் ஏதேனும் ஒன்றைத் தானமாக செய்தால் சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

• வஸ்திர தானம் - 1000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.
 
• இரத்தம் மற்றும் உடல் உறுப்புகள் தானம் செய்வதால் அக்னிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்.

• ஆலயத்துக்கு யானை தானம் - இந்திரனுக்குச் சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.

• குதிரையும், பல்லக்கும் தானம் - இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.

• நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பர் - வாயுலோகத்தில் வாழ்வார்.

•தானியங்கள், நவரத்தினங்கள் தானம் - மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.

• பயன் கருதாது தானம் - மரணம் உன்னதமாய் இருப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.

• பண உதவி - ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்.

• தாமிரப்பாத்திரத்தில் எள் தானம் - நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.

• சுவையான பழங்களைத் தானம் - ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.

• தண்ணீர் தானம் - கைலாச வாசம் கிட்டும்.

• நற்செயலை விரும்பிச் செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்.

• தெய்வம் பவனி வரும் வீதிகளைச் செம்மைப்படுத்துபவர் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.

எந்தெந்த பலனை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை தானம் செய்தால் அந்தந்த பலனை அடைவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com