பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம் ஆஷாட நவராத்திரி

ஆஷாட நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று ருத்ர தேவி (காளி சாமுண்டா) ரூபத்தில் அனைத்து கோயில்களிலும் அன்னை காட்சியளிக்கின்றாள். ஜூலை 2-ம் தேதி வரை ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம் ஆஷாட நவராத்திரி


ஆஷாட நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று ருத்ர தேவி (காளி சாமுண்டா) ரூபத்தில் அனைத்து கோயில்களிலும் அன்னை காட்சியளிக்கின்றாள். ஜூலை 2-ம் தேதி வரை ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம். விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம். இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது.

பொதுவாக ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது. வடமாநிலங்களில் சில இடங்களில் பிரபலமாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழகத்தில், தானியக் களஞ்சியமாக விளங்குகின்ற தஞ்சை மாநகரத்தில் அமைந்திருக்கக் கூடிய பிரகதீஸ்வர் கோயிலிலும் ஆஷாட நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம், அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க் கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி விவசாய வளமைக்காக கொண்டாடப்படுகின்றது.

ஆஷாட நவராத்திரியின், ஒன்பது தினங்களிலும், காலை வேளையில் சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம், மாலை வேளையில் அம்பிகைக்கு உரிய நவாவரண பூஜை, மஹா தீபாராதனையும் நடைபெறுகின்றது. ஆஷாட நவராத்திரியில் அம்பிகையை வழிபாடு செய்து, ஆனந்தமான நல்வாழ்வு வாழ பிரார்த்திப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com