சாலியமங்கலத்தில் பாகவதமேளா

தஞ்சாவூர் மாவட்டம் அச்சுதபுரம் எனும் சாலியமங்கலத்தில் ஆண்டுதோறும் நரசிம்ம
சாலியமங்கலத்தில் பாகவதமேளா

தஞ்சாவூர் மாவட்டம் அச்சுதபுரம் எனும் சாலியமங்கலத்தில் ஆண்டுதோறும் நரசிம்ம ஜெயந்தி உத்ஸவமும் அதனையொட்டி பாகவத மேள நாட்டிய நாடகங்களும் நடைபெற்றுவருகின்றன. இந்த சம்பிரதாயம் தஞ்சை மன்னர் அச்சுதப்பநாயக்கர் காலம் கி.பி.1645ஆம் ஆண்டு முதல் இடைவிடாமல் 372 ஆண்டுகளாக நிர்விக்னமாக நடைபெற்றுவருவது சிறப்பு.

இவ்வாண்டு நிகழ்ச்சிகளாக மே-7ஆம் தேதி, மே-8 ஆம் தேதி இவ்விரு நாட்களிலும் ஸ்ரீசீதாகல்யாண உத்சவம் கோவை ஸ்ரீ ஜெயராம பாகவதர் அவர்கள் தலைமையில் அம்பத்தூர் சி.எஸ்.எம்.சுப்பிரமணியன் அவர்களின் அபிநயத்துடன் நடைபெறுகின்றது மே-9ம் தேதி நரஸிம்ம ஜெயந்தியன்று மாலை 6 மணிக்கு ப்ராண ப்ரதிஷ்ட ஆராதனையும் தொடர்ந்து ஸ்ரீநிவாஸப்பெருமாள் கருட ஸேவையும், இரவு 10 மணிக்கு ஸ்ரீ பிரகலாத சரித்திரம் பாகவத மேள நாட்டிய நாடகமும் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ நிருஸிம்ம அவதாரக் காட்சியும் நடைபெறுகின்றன. மே-10ம் தேதி இரவு 10 மணிக்கு ஸ்ரீ ருக்மணி பரிணயம் பாகவத மேள நாட்டிய நாடகம் நடைபெறும். மே-11ம் தேதி காலை பாகவத ஸ்ம்பிரதாயப்படி ருக்மணி கல்யாணமும் அன்றிரவு ஸ்ரீ ஆஞ்சநேய உத்சவத்துடன் விழா நிறைவுபெறுகின்றது.

பக்தர்கள் பாரம்பரியம் மிக்க இந்த பக்திரஸ நாட்டிய நாடகங்கள் தொடர்ந்து நடைபெற ஆதரவு அளிக்கலாம். தொடர்புகளுக்கு : ஸ்ரீ லஷ்மி நரஸிம்ம பாகவதமேள பக்தசமாஜம், தொலைபேசி எண் : 8778155804 / 9894937368. சாலியமங்கலம் செல்ல தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.

இன்றைய நிகழ்ச்சிகள்

தஞ்சை மாவட்டம் – சாலியமங்கலம்

8.05.2017

ஸ்ரீ சீதாகல்யாண மகோத்சவம் – பாகவத பத்ததியில் – கோவை ஜெயராம பாகவதர் தலைமையில் அம்பத்தூர் சி.எஸ்.எம்.சுப்பிரமணியன் அபிநயம் – வஸந்த மண்டபம் – காலை 9 மணி.

9.05.2017

ஸ்ரீ நரஸிம்ம ஜெயந்தி – ப்ராண பிரதிஷ்டை ஆராதனை – மாலை 6 மணி – ஸ்ரீநிவாஸப் பெருமாள் கருட ஸேவை – இரவு 7 மணி – ஸ்ரீ பிரகலாத சரித்திரம் பாகவதமேள நாட்டிய நாடகம் – இரவு 10 மணி

10-05.2017

ஸ்ரீ நரஸிம்ம ஜெயந்தி – சாலியமங்கலம் பி.ஆர்.அர்ஜுன் குழுவினர் நாம சங்கீர்த்தனம் – மாலை 5.30 மணி ‘ஸ்ரீ ருக்மணி பரிணயம்’ – பாகவதமேள நாட்டிய நாடகம் – இரவு 10 மணி

11.05.2017

ஸ்ரீ நரஸிம்ம ஜெயந்தி – ருக்மணி கல்யாணம் – காலை 7 மணி ஸ்ரீ ஆஞ்சநேய உத்சவம் – இரவு 7 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com