சூரிய கடாட்சம் நிறைந்த குழந்தைகள் வேண்டுமா?

நவக்கிரகங்களில் முதன்மையாகக் கருதப்படுவது சூரியன். வாரத்தின் முதல் நாளான ஞாயிறு சூரியனின் பெயரைக் கொண்டே ஏற்பட்டுள்ளது.
சூரிய கடாட்சம் நிறைந்த குழந்தைகள் வேண்டுமா?

நவக்கிரகங்களில் முதன்மையாகக் கருதப்படுவது சூரியன். இவர், காசிப முனிவருக்கு அதிதி பால் பிறந்தவர் என்பதால் அவருக்கு ஆதித்தன் என்ற பெயர் உண்டாயிற்று. சூரியனார் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரியின் வடகரையில் உள்ளது. ஆடுதுறைக்கு தெற்கில் 2 கி.மீ தொலைவில் உள்ளது.

தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம்-பூம்புகார் சாலையில் கோவில் அமைந்துள்ளது. ஆடுதுறை இரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி இக்கோயிலை அடையலாம்.

சூரியனார் கோவிலில் சூரிய பகவான் சந்நிதி மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இராஜகோபுரத்திற்கு வெளியே சூர்யப் புஷ்கரணி என்ற மூன்று நிலைகளோடு ஐந்து கலசம் தாங்கி உயர்ந்து நிற்கிறது. சிவசூரிய நாராயணமூர்த்தி இடதுபுறத்தில் உஷாதேவியும் வலதுபுறத்தில் சாயாதேவியும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்கள். நவக்கிரகங்களே தங்களது சாபம் நீங்க விநாயகர் பிரதிஷ்டை செய்து, வழிபட்டு அருள் பெற்ற தலம் சூரியனார் கோயில்.

தென்னகத்தில் சூரியனுக்கான தனிக்கோயில் இதுதான். இங்கு, உஷாதேவி-சாயாதேவியுடன் அருளும் சூரியனாரைத் தரிசிக்கும் அதே நேரம், குருபகவானின் அருட்பார்வையும் ஒருசேர பெறலாம். சூரிய பகவானைச் சுற்றி நவக்கிரக நாயகர்களும் தனிச் சந்நிதிகளில் அருள்வது விசேஷம். கும்பகோணத்திலிருந்து கிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தலம்.

சூரியன் தை மாதம் மகர ராசியில் சஞ்சரிப்பதையே மகர சங்கராந்தியாகக் கொண்டாடுகிறோம் அன்று சூரியன், தட்சிணாயனத்தில் இருந்து உத்தராயனத்துக்கு சஞ்சரிக்கும் காலம். நவநாயகர்களில் சூரியன் சுபக்கிரகம். சூரிய பகவானுக்கு கோதுமை சர்க்கரைப் பொங்கல், கரும்பு, வாழை, தேங்காய் கொண்டு நிவேதனம் செய்து சிவப்பு வஸ்திரம், செந்தாமரைப் பூக்கள் அணிவித்து வழிபடுவது சிறப்பு.

இதனால் சத்ரு நாசம், சூரிய திசை, சூரிய புத்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். கண் கோளாறுகளும் நீங்கி அருள்பெற்றுச் செல்வது இந்தத் தலத்தின் சிறப்பு.

மேலும், இந்தத் தலத்தின் விருட்சமான வெள்ளெருக்கு மரத்தில் சிவப்புத் துணி சாற்றி, மஞ்சள் கட்டி புதுமணத் தம்பதிகள் வழிபட்டால், சூரியகடாட்சம் நிறைந்த குழந்தைகள் பிறக்கும். தீராத தோல் நோயும் தீரும் என்பது நம்பிக்கை.

சூரிய பகவானின் காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

சூரிய பகவானின் தியானம் மந்திரம்

தியாயேத் ஸுர்யம் அனந்தகோடி கிரணம்!
தேஜோமயம் பாஸ்கரம்!!
பக்தானாம் அபயப்ரதம் தினகரம்!
ஜ்யோதிர்மயம் சங்கரம்!!
ஆதித்யம் ஜகதீசம் அச்யுதம் அஜம்!
த்ரைலோக்ய சூடாமணீம்!!
பக்தா பீஷ்டவரப்ரதம் தினமணீம்!
மார்த்தாண்டம் ஆதித்யம் சுபம்!!

ஞாயிற்றுக்கிழமை தோறும் அதிகாலையில் சூரியனுக்கான கோலமிட்டு, கோதுமையில் செய்த பலகாரம் படையலிட்டு இந்த ஸ்லோகத்தை சொல்லிவந்தால் சூரிய கிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி, நற்பலன் பெறுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com