சபரிமலையில் புதிய கொடிமரம்: சந்நிதானத்துக்கு தோளில் சுமந்து சென்ற 2000 பக்தர்கள்

சபரிமலையில் நிறுவப்பட உள்ள புதிய கொடிமரத்தை 2,000 பேர் பம்பையில் இருந்து சந்நிதானத்துக்கு 22-ம் தேதி தோளில் சுமந்து சென்றனர்
சபரிமலையில் புதிய கொடிமரம்: சந்நிதானத்துக்கு தோளில் சுமந்து சென்ற 2000 பக்தர்கள்

சபரிமலையில் நிறுவப்பட உள்ள புதிய கொடிமரத்தை 2,000 பேர் பம்பையில் இருந்து சந்நிதானத்துக்கு 22-ம் தேதி தோளில் சுமந்து சென்றனர் என அகில பாரத ஐயப்ப சேவா சங்க செயலாளர் என்.வேலாயுதன் நாயர் தெரிவித்துள்ளார்.
 
சபரிமலையில் 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த கொடிமரத் தின் கீ்ழ்பகுதியில் சேதம் அடைந் துள்ளது. எனவே, அதற்குப் பதிலாக ரூ.3.50 கோடியில் புதிதாக தேக்கு மரத்தில் கொடிமரம் நிறுவுவதற்கு திருவாங்கூர் தேவசம் போர்டு கடந்த ஆண்டு முடிவு செய்தது. இதற்காக கோந்தி வயக்கரை வனப்பகுதியில் இருந்து 45 அடி நீளம், 135 செ.மீ. சுற்றளவு கொண்ட 64 வயதுடைய தேக்கு மரம் தேர்வு செய்யப்பட்டது. இந்த மரம் பம்பைக்கு கடந்த ஆண்டு செப் டம்பரில் கொண்டுவரப்பட்டது.
 
ஜூன் 25-ல் புதிய கொடிமரம்
இதனிடையே, புதிய கொடி மரத்தை நிறுவுவதற்காக பழைய கொடிமரம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பீடம் அமைக்கப்பட் டுள்ளது. ஜூன் 25-ம் தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படு கிறது. இந்நிலையில், பம்பையில் எண்ணெய்க் காப்பில் உள்ள கொடிமரத்தை சந்நிதானம் வரை தோளில் சுமந்து வரும் பொறுப்பு அகில பாரத ஐயப்ப சேவா சங்கத் திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக சபரிமலையில் கொடிமரம் அமைக்கும் பணிக்காக கேரள உயர் நீதிமன்றத்தால் வழக் கறிஞர் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் ஏ.எஸ்.பி.குரூப், ஐயப்ப சேவா சங்கத்துக்கு கடிதம் அனுப்பி யுள்ளார். இதையடுத்து கொடி மரத்தைத் தோளில் சுமந்து செல்வது தொடர்பாக அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் பொதுச்செய லாளர் என்.வேலாயுதன் நாயர், தமிழக தலைவர் எம்.விஸ்வநாதன், மாநிலச் செயலாளர் கே.ஐயப்பன், பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மதுரையில் நேற்று ஆலோசனை நடத்தினர்.
 
இதில், ஐயப்ப சேவா சங்கத் தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் சேர்ந்து மே 22-ம் தேதி புதிய கொடிமரத்தை பம்பையில் இருந்து சந்நிதானம் வரை தோளில் சுமந்து செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
20 நாட்கள் விரதம்
இது தொடர்பாக என்.வேலாயு தன் நாயர் கூறியதாவது: மே 22-ம் தேதி புதிய கொடிமரம் பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம், மரக்கூட்டம் வழியாக சந்நிதானத்துக்குக் கொண்டுசெல் லப்படும். இதற்காக ஐயப்ப சேவா சங்கத்தினர் மே 21-ம் தேதி பம்பை வர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அன்று அவர்களுக்கு தேவசம் போர்டு சார்பில் பயிற்சி அளிக் கப்படும்.
 
22-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்குள் சந்நிதானத்துக்கு கொடிமரத்தைக் கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளோம். கொடிமரம் முழுவதும் தங்கத் தகடு வேயப்பட்டு பீடத்தில் நிறுத்தப்படும். கொடிமரத்தைச் சுமக்க வரும் பக்தர்கள் 20 நாட்கள் விரதமிருந்து வர வேண்டும். கொடிமரத்தை சுமக்க வரும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்களைச் சேர்ந்த பக்தர் களின் வசதிக்காக கோட்டயம், செங் கானூர், பத்தனம்திட்டா பகுதியில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கவும், போதுமான கழிப்பறை வசதிகளைச் செய்யவும், மருத்துவ முகாம்கள் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
 
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக பக்தர்களுக்கு உணவு வழங்க கோவையில் இருந்து தேவையான பொருட்கள் சபரி மலைக்கு எடுத்துச் செல்லப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com