வீட்டில் பணம் தங்கவில்லையா? என்ன சொல்கிறது வாஸ்து?

ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறையான ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் ஏதோ உள்ளதாக வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றது.
வீட்டில் பணம் தங்கவில்லையா? என்ன சொல்கிறது வாஸ்து?

வீட்டில் எவ்வளவு பணம் வந்தாலும் தங்கவில்லை...விரையச் செலவு அதிகமாக ஆகிறதே...என்ன தான் செய்வது, வீட்டை மாற்றி விடலாமா, இல்லை ஏதேனும் நல்ல ஜோதிடரை அணுகலாமா என்று புலம்புபவர்கள் அதிகம்...

எதற்காக இப்படி? யோசிக்க வேண்டிய விஷயம். வாடகை வீடு என்றால் மாற்றி விடலாம்..சொந்த வீடு என்றால் எப்படி மாற்ற முடியும்...சரி அப்படி என்ன தான் பிரச்னை. நாம் ஏதேனும் தவறுகள் செய்கிறோமோ? சரி விஷயத்திற்கு வருவோம்.

ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறையான ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் ஏதோ உள்ளதாக வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றது. வாஸ்து சாஸ்திரம் கூறுவதைப் போல நமது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்படி, இருக்கும் அந்தத் தவறான செயல்பாடுகள் என்ன தெரியுமா?

பெரும்பாலும் ஒரு வீட்டின் லட்சுமி கடாட்சம் எங்கு நிறைந்திருக்கும் என்றால் அது நம் வீட்டின் பூஜை அறையில் தான். நமது வீட்டுப் பூஜை அறை சரியான திசையில் அமைக்கப்பட்டுள்ளதா  என்று கவனிக்க வேண்டும். பின்னர், பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ள சாமி சிலைகளை கவனிக்க வேண்டும். இரண்டு தெய்வங்களின் சிலைகளை எதிரெதிரே பார்த்தவாறு வைத்தல் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்துவிடும் என்கிறது வாஸ்து.

வீட்டில் உடைந்த கண்ணாடி அல்லது வேறு கண்ணாடி பொருட்கள் மற்றும் விரிசல் அடைந்த கண்ணாடி ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது. இவைகள் நமது வீட்டில் நிதி சிக்கல்களை ஏற்படுத்துமாம். உடைந்த சாமி சிலைகள் அல்லது கடவுளின் கிழிந்த புகைப்படங்கள் இது போன்றவை வீட்டின் உட்புறம் மடித்து வைப்பதோ அல்லது தனியாக எடுத்து வைப்பதோ கூடாது. இவைகள் வீட்டின் பொருளாதார பிரச்னைகளை அதிகரிக்கும்.

வீட்டினுள் வளர்ப்பதற்கென்று உள்ள செடிகள் மட்டுமே வீட்டின் உள் பகுதியில் வைக்க வேண்டும். முட்கள் நிறைந்த செடிகளை வீட்டினுள் வைத்து வளர்க்காமல், வீட்டின் வெளிப்பகுதியில் வைத்து வளர்க்கலாம். ஏனெனில் இது நமது வீட்டில் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

மேலும், நமது வீட்டில் பழுதடைந்த பொருட்களைக் கடையில் போடுவதற்கு மனமின்றி அப்படியே பரனை மேல் போட்டு வைக்கக்கூடாது. உதாரணமாக எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்த நிலையில் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும், இல்லையெனில் வெளியே அகற்றி விடுவது நல்லது. ஏனெனில் அவை நமது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.

வீட்டினுள் எந்தப் பொருளை எங்கு வைக்கலாம், எந்தத் திசையில் வைத்தால் நல்லது என்று நமக்குத் தெரியவில்லை என்றாலும், தெரிந்தவர்களிடம் கேட்டு அதன்படி செயல்படுத்தினால் வீட்டில் எந்தவித பிரச்னையும், பொருள் இழப்பும் இன்றி வாழ்க்கை சுமூகமாக நடத்தலாம் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com