ஹம்பி சென்று நரசிம்மரை தரிசிக்க இயலாதவர்களுக்கு காஞ்சியில் ஓர் அரிய வாய்ப்பு!

ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் மூலஸ்தானத்தின் மூலவராக ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம ஸ்வாமி யோகாசனக் கோலத்தில் பிரம்மாண்டமாக காட்சி...
ஹம்பி சென்று நரசிம்மரை தரிசிக்க இயலாதவர்களுக்கு காஞ்சியில் ஓர் அரிய வாய்ப்பு!

கர்நாடக மாநிலம், ஹம்பி என்னும் இடத்தில் 6.7 மீட்டர் உயரமுள்ள ஒற்றைக்கல் சிலை ஆதிசேஷ பீடத்தில் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீ லக்ஷமி நரசிம்மர் காட்சியளிக்கிறார். இக்கோயில் கிருஷ்ண தேவராய ஆட்சியின்போது 1528-ம் ஆண்டு கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றது. அப்படிப்பட்ட அரிய கோயிலை கர்நாடக மாநிலம் சென்று தரிசிக்க முடியாதவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம், கட்டவாக்கம், வாலாஜபாத் கிராமம் அருகே மிகப் பிரம்மாண்டமாக ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இது, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு  கட்டப்பட்டதாகும். 

ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் மூலஸ்தானத்தின் மூலவராக ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம ஸ்வாமி யோகாசனக் கோலத்தில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறார். இவர், தனது மடிமீது மஹாலஷ்மி தாயாரை இருந்தி விஸ்வரூப தரிசனம் தருகிறார். மேற்கரங்களில் சக்கரம், வில், அம்பு ஆகியன கொண்டும், கீழ்க்கரங்களில் அபய வரத ஸ்தம் கொண்டும், சதுர் புஜங்களுடன் கூடிய அழகிய திருமேனி.

பெருமாளுக்கு குடைபிடிக்கும் ஆதிசேஷன் மீது சாளக்கிராம கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. பெருமாளின் திருமேனி பீடத்துடன் 25 அடி உயரமும், 15 டன் எடையும் கொண்டது. சிறப்பு என்னவென்றால் இங்குள்ள நரசிம்மர் மூன்று கண்களுடன் காட்சியளிக்கின்றார். 

கர்நாடக மாநிலம், ஹம்பியில் உள்ள நரசிம்மரை போன்று காஞ்சிபுரத்தில் உள்ள பிரம்மாண்ட விஷ்வரூப நரசிம்மரை கண்ணரா கண்டு பேரானந்தம் அடைவோம். 

இத்தலத்துக்கு எப்படி போகலாம்? 
சென்னையில் இருந்து 60 கி.மீட்டர் தூரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், கட்டவாக்கம், வாலாஜாபாத் அருகில் அமைந்துள்ளது. 

மேலும் தகவல்களுக்கு - 94442 25091, 044 - 27290805

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com