எடுத்த காரியம் தடையின்றி முடிக்க சொல்ல வேண்டியவை...

நவக்கிரகங்களில் நான்காவதாக இடம் பெற்றிருப்பவர், புதன். பொன் அகப்பட்டாலும்,
எடுத்த காரியம் தடையின்றி முடிக்க சொல்ல வேண்டியவை...

நவக்கிரகங்களில் நான்காவதாக இடம் பெற்றிருப்பவர், புதன். பொன் அகப்பட்டாலும், புதன் அகப்படாது என்ற பெருமைக்குரியவர். மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாத போதுகூட, புதன் அதைச் சரிசெய்து நமக்கு அருள் செய்வார்.

கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும், எடுத்த காரியம் தடையில்லாமல், திறமையாக செய்துமுடிக்க இந்த ஸ்லோகத்தை சொல்லலாம்.

புதன் மந்திரம்

ப்ரிங்கு கலிகா ச்யாம்
ருபேணா ப்ரதிமம் புதம்
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம் யஹம்

புதன் காயத்ரி

ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத: பிரசோதயாத்

இந்த பாடலை பாடி புதன் அருளை பெறலாம். புதன் கிழமை அன்று நாராயணை வழிபட்டு பின்னர் நவக்கிரங்களை வணங்கி, பின் புத பகவான் முன் நின்று வழிபட வேண்டும். இப்படி செய்தால் சகல சிறப்புகளையும் அடையலாம்.

பூஜையறையில் 5 அகல் தீபம் ஏற்றி, இஷ்ட தெய்வத்தை வணங்க, பெருமாளை வழிபடவும். புதன்கிழமை பச்சை பயறு வேக வைத்து பசு மாட்டுக்கு கொடுக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com