ஜோதிடப்படி குறைபாடுள்ள குழந்தை பெறும் அவயோகம் யாருக்கு? 

ஜோதிட சாஸ்திர விதிப்படி, ஒருவரின் ஜாதகத்தில் மகரம் / கும்பம் / ரிஷபம் லக்னமாக அமையப்பெற்று....
ஜோதிடப்படி குறைபாடுள்ள குழந்தை பெறும் அவயோகம் யாருக்கு? 

ஜோதிட சாஸ்திர விதிப்படி, ஒருவரின் ஜாதகத்தில் மகரம் / கும்பம் / ரிஷபம் லக்னமாக அமையப்பெற்று, அந்த லக்னத்தில் அல்லது லக்னாதிபதியுடன் சனிபகவான் செவ்வாய், இணைந்து இருந்தாலோ அல்லது அவர்களின் பார்வை பெற்றாலோ அந்தக் குழந்தை ஏதேனும் குறைபாடோடு பிறக்க அதிக வாய்ப்புள்ளது. 

(எ.கா..) ஒரு சில குழந்தை கொடி சுற்றிக் கொண்டு பிறக்கும், ஒரு சில குழந்தைகள் மாலையுடன் பிறக்கும், ஒரு சில குழந்தைகள் புத்தி கூர்மையுடன் பிறக்கும் ஆனால் உடலில் ஏதேனும் குறைபாடு இருக்கும். வயதாகி குழந்தை பிறத்தல்...இவ்வாறு ஜனனமாவது ஒருவித தோஷம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். நவக்கிரங்களின் தன்மையால் வினோதமான புத்திர / புத்திரி பாக்கியம் ஏற்படுகிறது. 

எந்த மாதிரியான ஜாதக அமைப்பு இருந்தால் ஜாதகருக்கு குறைபாடு உள்ள குழந்தை பெறும் யோகம் ஏற்படும் என்பதை பற்றிப் பார்ப்போம்.  

ஜோதிட சாஸ்திரவிதிப்படி ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 1-5-9-ம் இல்லத்தில் திரிகோணஸ்தானம் பாபக்கிரகங்கள் அமையப்பெற்றால் ஜாதகர்கள் நிச்சயம் ஊனமுடைய குழந்தைகளை அடையப்பெறுவர் அல்லது 100 சதவீத புத்திர பாக்கியமின்றி மனம் வருந்துவர் என்பது ஜோதிட சாஸ்திர கூறுகிறது. 

ஜோதிட சாஸ்திர விதிப்படி, ஒருவரின் ஜனன ஜாதகத்தில், புத்திர தோஷத்திற்கான கிரகங்கள் அமைப்பு இருப்பினும் கர்மக் காரகனான செவ்வாய் அல்லது கர்மஸ்தானாதிபதியோ (10-ம் இல்லத்து அதிபதி) நல்ல பலம் பெற்று ஆட்சியாக அமையப்பெற்றால் ஜாதகர்கள் அவரது 42-45 வயதில் நிச்சயம், ஓரிரு கர்மபுத்திர பாக்கியம் அடையப்பெறுவர் என்பதாகும்.

ஜோதிட சாஸ்திர விதிப்படி, ஒருவர்/ஜாதகர், தமது முந்திய ஜன்மத்தில்/ இந்த ஜன்மத்தில் செய்த பாவ/புண்ணியத்திற்குத் தக்கவாறு சர்ப்பசாபம்/ஸ்தீரி சாபம்/ கோ சாபம்/மாதுர், பிதுர் சாபம்/ தெய்வசாபம் ஆகியவைகளில் ஏதாவதொன்று அல்லது பல அடையப் பெற்றிருப்பர். என்பதற்கொப்ப அவரது ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் அமைப்பைப்பெற்று ஜாதகர் புத்திரதோஷம் அடையப்பெற்று, வாழ்நாள் பூராவும் வருந்துவர் என்பதாகும்.

ஜோதிட சாஸ்திரவிதிப்படி ஒருவரின் ஜனன ஜாதகத்தில், லக்னத்திற்கோ அல்லது லக்னாதிபதி நின்ற ஸ்தானத்திற்கோ 5-ம் இல்லத்தில் (புத்திர ஸ்தானம்) சர்ப்பக்கிரகங்களாகிய இராகு/கேது அல்லது சனிபகவான் அமையப்பெற்றிருந்தால் ஜாதகர்கள், புத்திர தோஷமாகும் அதனால் அதிகப்படியான கருச்சிதைவுகளை அடையப்பெறுவர்.

ஜோதிடசாஸ்திர விதிப்படி ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னாதிபதியும் புத்திரஸ்தானாதிபதியும் (5ம் இல்லது/புத்திர ஸ்தானத்தின் அதிபதிக் கிரகம்) இணைந்து ஒரு ராசியில் வீற்றிருக்க குருவின் பார்வை பெற்று அமையப் பெறுவதால் ஜாதகர் அதிகளவில் சற்புத்திரர்களை அடையப்பெறுவர்.

புத்திர தோஷத்திற்கான பரிகாரம் என்ன செய்யலாம்?
ஜனன ஜாதகத்தில் புத்திரதோஷம் அமையப்பெற்றவர், தம்பதியராக, ராமேஷ்வரம் சென்று சேதுஸ்நானம் செய்தும் ஓர் அர்ச்சகரின் மூலம் சாந்தி செய்து வந்தால் ஜாதகர், புத்திர தோஷம் நீங்கப்பெற்று, நாளடைவில், புத்திரவிருத்தி/புத்திர பாக்கியம் அடைவர்.

ஜாதகர், தம்பதி சகிதம், காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று சுவர்ணமுகி நதியில் ஸ்நானம் செய்து காலை திரிநாதருக்கு பச்சைக் கற்பூர அபிசேகம் செய்து அபிஷேகத் தீர்த்தம் ஒரு வாரம் பருகி வர, அவர்களது புத்திரதோஷம் முழுமையாக நீங்கப்பெற்று, ஜாதகருக்கு நாளடைவில் புத்திரர்/புத்திரி பாக்கியம் நிச்சயம் அடையப்பெறுவர்.

- ஜோதிடர் ஏ.கே.ஆறுமுகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com