பிரச்னையின்றி அன்றைய தினம் கழிய என்ன செய்யலாம்? 

நம் அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றன. கைகளின் உதவி இல்லையெனில் நம்மால் ஒரு வேலையும் செய்ய இயலாது. நம் புலன்களில் கைகளுக்கு சிறப்பான இடம் உண்டு.
பிரச்னையின்றி அன்றைய தினம் கழிய என்ன செய்யலாம்? 

நம் அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றன. கைகளின் உதவி இல்லையெனில் நம்மால் ஒரு வேலையும் செய்ய இயலாது. நம் புலன்களில் கைகளுக்கு சிறப்பான இடம் உண்டு.

காலையில் எழுந்தவுடன் இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங் கைகளைப் பார்க்க வேண்டும். இதனால் அன்றைய பொழுது பிரச்னையில்லாமல் நடக்கும். பெற்ற தாயைத் தவிர வேறு எவர் முகத்திலும் விழிக்காமல் காலையில் உள்ளங்கையைப் பார்க்கலாம். கை வெளுப்பாக இருக்கும். இந்த வெளுத்த உள்ளங்கையில் விழிப்பது நல்ல சகுனமாகும்.

உள்ளங்கையில் மகாசக்தி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி இருந்து அருள் புரிகிறார்கள். இவர்களின் அருளைப் பெறுவதற்கு கை பார்க்கும் பழக்கம் உதவும்.

ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனே நாம் சொல்வது காலையில் "யார் முகத்தில் விழித்தேனோ இன்றைய நாளே சரியில்லை' என்றுதான். நம் கைகளில் விழித்தால் பிரச்னை இல்லையே. சரி கையை பார்க்கும் போது என்ன சொல்லி பார்க்கலாம்....

கையை பார்க்கும்போது சொல்ல வேண்டியவை...

"கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே சரஸ்வதி
கரமூலேது கௌரி: ஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம்''

என்ற ஸ்லோகத்தை சொல்லிவிட்டு விழிக்கலாம். இதனால், அன்றைய நாள் குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். காரியத் தடைகள் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com