கோவிலை எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன்? 

கோவிலை பிரதட்சணம் செய்தல் என்பது பல ஜென்மங்களில் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.
கோவிலை எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன்? 

கோவிலை பிரதட்சணம் செய்தல் என்பது பல ஜென்மங்களில் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும்.

பொதுவாக பிரதட்சணம் செய்யும் பொது அவசரம் அவசரமாக நடந்துசெல்லக் கூடாது. நிதானமாக அடிமேல் அடிவைப்பது போல நடக்க வேண்டும். நமக்கு இருக்கும் அவசர வேலையை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, நிதானமாக கடவுளை மனதார நினைத்து, வலம் வருதலே சரியான முறையாகும்.

எந்தக் கோவிலை வலம் வந்தாலும் அல்லது சந்நிதிகளை சுற்றி வந்தாலும் இந்த மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு சுற்றிவருவது நல்லது. 

யாநி காநிச பாபாநி ஜன்மாந்த்ர கிருதாநிச!
தாநி தாநி ப்ரணச்யந்தி பிரதட்சிண பதே பதே!

பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் கோவிலை பிரதட்சணம் செய்வதால் விலகும் என்பது இதன் பொருள். 

கோயில் அல்லது தெய்வ சந்நிதிகளையோ பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

மூன்று முறை வலம் வந்தால் - இஷ்ட சித்தி அடையலாம்.

ஐந்து முறை வலம் வந்தால் - வெற்றிகள் கிட்டும். 

ஏழு முறை வலம் வந்தால் - நல்ல குணங்கள் பெருகும். 

ஒன்பது முறை வலம் வந்தால் - நல்ல புத்திர பாக்கியம் கிட்டும். 

பதினோரு முறை வலம் வந்தால் - ஆயுள் பெருகும். 

பதின் மூன்று முறை வலம் வந்தால் - செல்வம் பெருகும்.

நூற்றியெட்டு முறை வலம் வந்தால் - அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com