ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக துவக்கம் 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக துவங்கியது. 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக துவக்கம் 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக துவங்கியது. 

இந்த விழாவானது ஏழு நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி இரவு 7.00 மணிக்கு ஆண்டாள் சன்னதி தெற்கு பிரகாரத்தில் உள்ள ஊஞ்சலில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருள்கின்றனர். 

அப்போது, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருவாய்மொழி சேவாகாலம் நடக்கிறது. கடைசி நாளான பூர நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் அவதரித்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்புப் பூஜைகள் நடக்கிறது.

ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவ ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன் செயல் அலுவலர் ராமராஜா செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com