குரு ஹோரையில் என்னென்ன செய்யலாம்? 

‘நாள் செய்வதை நல்லோர் செய்யார்’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். எந்த நேரத்தில் என்ன செய்தால் நல்ல பலன் கிடைக்கும்...
குரு ஹோரையில் என்னென்ன செய்யலாம்? 

‘நாள் செய்வதை நல்லோர் செய்யார்’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். எந்த நேரத்தில் என்ன செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள் வகைப்படுத்தியுள்ளனர். ஜோதிடத்தில் ஹோரை என்று குறிப்பிடுவது அந்த நேரத்தைத்தான். 

நாம் செய்ய விரும்பும் காரியங்களை எந்த ஹோரையில் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை இந்த ஹோரை நேரம் நமக்கு வழிகாட்டுகிறது. காலை ஆறு மணிக்கு இந்த ஹோரை நேரம் துவங்குகிறது. சரி, குரு ஹோரையில் என்னென்ன செய்யலாம் என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். 

குரு ஹோரையில் ஆலயங்களுக்குச் செல்லலாம். ஆன்மிக விஷயங்களில் ஈடுபடலாம். சான்றோர்களைச் சந்திக்கலாம். ஆன்மிக குருவைச் சந்திக்கலாம். தான தருமங்கள், புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். குரு பூஜை செய்ய, பாட்டு மற்றும் நடனம் ஆரம்பிக்க, திருமணம் செய்ய, கடை திறப்பு விழா மேற்கொள்ள, வங்கியில் பணம் போட, தங்க ஆபரணங்கள் வாங்க, ஆன்மிகவாதிகளைச் சந்திக்க அல்லது சித்தர்களைக் காண நல்ல நேரமாகும். 

குருபலம்:
ஒருவரின் ராசியிலிருந்து (சந்திர பகவானிருக்குமிடம்) குருபகவான் 2,4,7,9,11-ம் ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் குருபலம் கூடும் காலமென்று கூறுகிறோம். குருபகவான் வக்கிரம் பெற்று சஞ்சரிக்கும் காலமான சராசரியாக நான்கு மாதங்கள் மற்ற ராசிக்காரர்களுக்கும் குருபலன் உண்டாகும் என்று கூறலாம்.

குருபகவான் ஆட்சி, உச்சம் பெற்று அமரும் போது மூன்று லட்சம் தோஷங்கள் மறைகிறது என்று கூறுவர். குருபகவானின் பார்வையினால் புத்திர தோஷம், களத்திர தோஷம், பிதுர் தோஷம் ஆகியவை மறைந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com