மகான் ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள் கங்காவதரண மகோத்ஸவம் 

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது திருவிசலூர் கிராமம்.
மகான் ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவாள் கங்காவதரண மகோத்ஸவம் 

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது திருவிசலூர் கிராமம். இங்குதான் பஜனை சம்பிரதாயத்தின் மும்மூர்த்திகள் எனப்போற்றப்பட்டவர்களில் ஒருவனை ஸ்ரீதர அய்யாவாள் தனது அபாரமான சிவபக்தியால் தன் வீட்டுக் கிணத்திலேயே கங்கையை வரவழைத்தார். அந்நிகழ்வு நடந்தது ஒரு கார்த்திகை அமாவாசை தினத்தன்றாகும். இன்றும் அந்நாளில் அக்கிணற்றில் கங்கை பிரவாகிப்பதாக ஐதீகம். இதனையொட்டி 10 நாட்களுக்கு கங்காவதரண மகோத்ஸவம் அவர் வாழ்ந்த இல்லத்தில் (தற்போது மடம்) நடைபெறுகின்றது. 

இவ்வாண்டு நிகழ்ச்சிகள் நவம்பர் 9-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறுகின்றது. இதனையொட்டி காலைவேளைகளில் பிரபல பாகவதோத்தமர்கள் பங்கேற்கும் நாம சங்கீர்த்தன பஜனைகளும் 
மாலையில் பிரபல வித்வான்கள், விதூஷிகள் பங்கேற்கும் இன்னிசைக் கச்சேரிகளும் நடைபெறுகின்றது. 

முக்கிய நிகழ்வாக நவம்பர் 18-ம் தேதி சனிக்கிழமை கார்த்திகை அமாவாசை தினத்தன்று அதிகாலை கங்காபூஜையும், கங்காஷ்டக பாராயணமும் நடைபெற்றபின் அன்று முழுவதும் பக்தர்கள் 
கங்காஸ்நானம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். நவம்பர் 19-ம் தேதி ஸ்ரீதர அய்யாவாள் படத்துடன் திருவீதி உலாவும், ஆஞ்சநேய உத்ஸவமும் நடைபெற்ற பின் விழா முடிவடைகின்றது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ஸ்ரீதரஐயாவாள் சாரிடபிள் டிரஸ்ட் செய்துள்ளது மேற்படி உத்ஸவ நாட்களில் குடந்தை ஸ்ரீசங்கர மடத்திலிருந்து திருவிசலுருக்குப் போய்வர வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிரஸ்டின் மானேஜிங் டிரஸ்டி ஸ்ரீராமநாதன் ராம்ஜி தெரிவிக்கின்றார். 

மேலும் தகவல்களுக்கு - 0435 246222 செல் 09444056727

திருவிசலூருக்குச் செல்ல கும்பகோணத்திலிருந்து டவுன் பஸ் 2, 2A, 2B. 38 

-எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com