நிறம் மாறும் கோயில் குளம் - அதிசயத்தின் உச்சத்தில் கீர் பவானி ஆலயம்

ஸ்ரீநகரிலிருந்து 27 கி.மீ தொலைவில் துலா முலா என்னும் கிராமத்தில் உள்ளது கீர் பவானி திருக்கோயில். இக்கோயிலைச் சுற்றியுள்ள மரங்களும், சுனையும் பார்ப்பவரை வெகுவாக கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ளது. 
நிறம் மாறும் கோயில் குளம் - அதிசயத்தின் உச்சத்தில் கீர் பவானி ஆலயம்

ஸ்ரீநகரிலிருந்து 27 கி.மீ தொலைவில் துலா முலா என்னும் கிராமத்தில் உள்ளது கீர் பவானி திருக்கோயில். இக்கோயிலைச் சுற்றியுள்ள மரங்களும், சுனையும் பார்ப்பவரை வெகுவாக கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ளது. 

இங்குள்ள அன்னையை பவானி தேவி என்றும், ராஞ்னய தேவி என்றும் அழைக்கின்றனர். 1912-ம் ஆண்டு அரசர் பிராதாப் சிங் என்பவரால் இவ்வாலயம் கட்டப்பட்டு, பின்னர் ஹரி சிங் என்ற அரசரால் புதுப்பிக்கப்பட்டது. 1912-ம் ஆண்டு அரசர் பிராதாப் சிங் என்பவரால் இவ்வாலயம் கட்டப்பட்டு, பின்னர் ஹரி சிங் என்ற அரசரால் புதுப்பிக்கப்பட்டது.

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மா பவானி தேவிக்கு 'கீர்' என்ற இனிப்பு பாயசத்தையும் பாலையும் பிரசாதமாக வழங்கி வருவதால் இக்கோயிலுக்கு கீர் பவானி என்று பெயர் வந்தது. 

புராணக் கதைகளில் இத்தலத்தில் இராவணன் பவானி தேவியை வழிபட்டதாகவும், ஸ்ரீ ராமர் வழிபாடு செய்த தலமாகவும், ஸ்ரீ ராமரின் வனவாச காலம் முடிந்து அவர் நாடு திரும்பும் போது, தேவியின் உருவச் சிலையை ஷாதிபொராவிற்கு மாற்றச் சொல்லி ஹனுமனுக்கு ஸ்ரீ ராமர் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

ஜாதி பாகுபாடு இல்லாமல் அங்கிருக்கும் இஸ்லாமியர்களும் இக்கோயிலுக்குச் செல்வது வழக்கமாம். ஆனால், கோயிலுக்கு வரும்போது அவர்கள் அசைவ உணவை உண்பதில்லையாம். கீர் பவானியின் பவித்திரத்தை உணர்ந்த அந்நாட்டு இஸ்லாம் மக்களும் கோயிலில் நடைபெறும் பூஜை மற்றும் பஜனையில் கலந்துகொண்டு பவானி தேவிக்கு சேவை செய்து வருகின்றனர். 
கீர் பவானியை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் ஒரு வாரத்திற்கு முன்பாகவே மாமிசம் உண்பதை நிறுத்தி விட்டு பவானி தேவிக்கு விரதம் இருந்து சிரத்தையுடன் கோயிலுக்குச் செல்கின்றனர். 

இக்கோயிலில் என்ன ஒரு அதிசயம் என்றால், மே மாதங்களில் பௌர்ணமியிலிருந்து எட்டாம் நாள் இங்கு பெரும் அளவில் பக்தர்களை காணலாம். இந்தப் புனித நாளில் தான் தேவி குளத்தில் உள்ள நீரின் நிறத்தை மாற்றுவதாக ஒரு நம்பிக்கை. குளத்தின் நீர் நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் மாறுமாம். அவ்வாறு மாறும் போது கருப்பாக மட்டும் மாறக்கூடாதாம். அவ்வாறு மாறினால் அந்த ஊருக்கு ஏதோ அசம்பாவிதம் நிகழப்போவதற்கு அறிகுறியாம். அப்படி மாறும் பட்சத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு தேவிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறுகிறது. 

ஜெஷ்ட அஷ்டமி மற்றும் சுக்ல பக்‌ஷ அஷ்டமி போன்ற தினங்கள் இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com