மேனாம்பேடு: ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆலயத்தில் லட்சார்ச்சனை

இரணியாட்சன் மகனாகிய அந்தகாசூரன் சிவபெருமானிடத்தில் பல வரங்களைப்பெற்று,
மேனாம்பேடு: ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆலயத்தில் லட்சார்ச்சனை

இரணியாட்சன் மகனாகிய அந்தகாசூரன் சிவபெருமானிடத்தில் பல வரங்களைப்பெற்று, தன்னை யாராலும் வெல்லமுடியாது என்ற பேராற்றலும் பெரும் யோக நுகர்ச்சியும்பெற்று தேவர்களை அடக்கி தேவியர்களின் கற்பை சூரையாடத் தொடங்கினான். 

அந்தகாசூரனின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானை சரணடைந்தனர். இதைக் கேட்ட சிவபெருமான் மகா பைரவரை கார்த்திகை தேய்பிறை அஷ்டமியில் தோற்றுவித்தார். அந்தகாசூரன் தன் மாயசக்தியால் உலகை இருளாக்கினான். மகா பைரவர் அதி உக்ரத்துடன் அவருடைய கோப கனலில் இருந்து அஷ்டபைரவரை தோற்றுவித்தார். அந்த எட்டு பைரவர்களும் அஷ்டதிக்கிலிருந்த மாய இருளை அகற்ற மகா பைரவர் போர் புரிந்து அந்தகாசூரனை வென்றார்.

அவனை தன் சூலாயுதத்தால் குத்தி தூக்கியவாறு மூன்று உலகங்களிலும் திரிந்தார். அவனது உடலில் இருந்து வடிந்த குருதியை குடித்தார். அவன் அஞ்சி இறஞ்சியதால் அவனை சூலத்திலிருந்து விடுவித்தார். அந்தகாசூரனின் ஆணவத்தை அழித்த தினம் கார்த்திகை மாதம் சஷ்டி. அதுவே சம்பா சஷ்டி.

அம்பத்தூரில் உள்ள மேனாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமனோன்மணி சமேத ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆலயத்தில், நிகழும் ஸ்ரீஹேவிளம்பி ஆண்டு கார்த்திகை 8ம் தேதி (24.11.2017) வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், சிவபெருமானே மஹா பைரவராய் தோன்றி அந்தகாசூரனை சம்ஹாரம் செய்யும் சம்பா சஷ்டி எனப்படும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும்.

அமாவாசை அன்று காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கானோர் கோயிலில் காப்புக் கட்டி விரதத்தைத் துவங்கினர். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முதல் கார்த்திகை 10ம் தேதி (26.11.2017) ஞாயிற்றுக்கிழமை வரை கோயிலில் தினந்தோறும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் பைரவர் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

தினந்தோறும் மாலை 7 மணியளவில் ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் சிறப்பு அபிஷேகமும், 8 மணியளவில் அன்னப்படையலும் நடைபெறுகிறது.

எனவே பக்த கோடிகள் அனைவரும் லட்சார்ச்சனையில் கலந்து கொண்டு இறையருள் பெறும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வீராட்டானேஸ்வரரின் கருணையினால் துஷ்டசக்தியிலிருந்து விடுபடவும் கிரகதோஷ நிவர்த்திகளுக்கும் எதிரி தொல்லையிலிருந்து விடுபடவும் நோய் நவிரணத்திற்கும் எமபயம் நீங்கவும் பில்லி, சூனியம், ஏவல்களிலிருந்து விடுபடவும், வியாபார லாப அபிவிருத்திக்கும் தங்கு தடைகள் நீங்கவும் நவகிரகங்களின் நற்பலன் கிடைக்கவும் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கும் மக்கட்செல்வம் கிடைக்கவும், இழந்த செல்வத்தை திரும்பப் பெறவும், மனதில் உள்ள தீய எண்ணங்கள் அகலவும் திருமண தடைகள் நீங்கி நல்ல வரன் அமையவும் துர்மரணத்திலிருந்து காக்கவும் இவ்வழிபாடு அருள்புரிகின்றது. 

மேலும் தொடர்புக்கு : 9003 086 204

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com