கே.சி.எஸ் ஐயர் கணித்த இந்த வார பலன்கள் (மேஷம் முதல் மீனம்)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (நவம்பர் 24 முதல் நவம்பர் 30 வரை) ராசி பலன்களை துல்லியமாக நமக்கு கணித்து வழங்கியுள்ளார்.
கே.சி.எஸ் ஐயர் கணித்த இந்த வார பலன்கள் (மேஷம் முதல் மீனம்)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (நவம்பர் 24 முதல் நவம்பர் 30 வரை) ராசி பலன்களை துல்லியமாக நமக்கு கணித்து வழங்கியுள்ளார்.

•••

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

திட்டமிட்டு காரியங்களைச் செய்து முடிப்பதில் சில சிரமங்கள் ஏற்படும். இருப்பினும் மன உறுதியால் அவற்றைத் தகர்த்து விடுவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். சிலருக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். இறைவழிபாடு அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் தென்படும். வேலைகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். சரளமான பண வசதிகள் ஏற்படும். விவசாயிகளுக்கு மகசூல் குறையும். அதனால் புதிய பயிர்களைப் பயிர் செய்ய வேண்டாம். கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் திரும்பவும் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. ஆனால் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற கடுமையாக உழைக்கவும். 

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 24,25. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட வேலைகளால் எந்தக் கவலையும் இல்லாமல் ஈடுபடுவீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். பெற்றோர்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். சுபச்செய்திகளால் மனம் நிம்மதி அடையும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களிடம் நட்போடு பழகுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளிடம் நல்லமுறையில் பழகவும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவு செய்வீர்கள். 

அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையுடன் நடந்து கொள்ளும். புதிய பொறுப்புகளையும் வழங்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 
ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். 

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் அதிக ஈடுபாட்டைக் காட்டுவீர்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். 

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 24,26. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

உங்கள் அந்தஸ்து உயரும். செயல்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்களின் தெளிவான சிந்தனைகளை மற்றவர்கள் பாராட்டுவார்கள். உடல் ஆரோக்கியம் பலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். வரவேண்டிய பணம் வந்து சேரும். 

உத்தியோகஸ்தர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரிகள் பெரிய சந்தைகளை நாடிச் சென்று தற்போதைய வியாபாரத்தைப் பெருக்கவும். ஏனெனில் புதிய முயற்சிகளைச் செய்வதற்கு இது உகந்த நேரமல்ல. விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மகசூல் அதிகரிக்க நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும். 

அரசியல்வாதிகள் தங்களின் செயல்பாடுகளில் வெற்றி பெறுவார்கள். தன்னம்பிக்கை பலப்படும். கலைத்துறையியினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் முழுமையாகக் கிடைக்கும். சக கலைஞர்களிடம் அனுசரணையோடு நடந்து கொள்ளுங்கள். பெண்மணிகள் ஆடை அணிமணிகளை வாங்குவீர்கள். கணவரிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். மாணவமணிகள் ஒருமித்த 
மனதுடன் படித்து மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

பரிகாரம்: விநாயகரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 26,27. 

சந்திராஷ்டமம்: 24,25.

•••

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

முன்னேற்றத்திற்கான வழிகள் பிறக்கும். பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். தர்ம சிந்தனைகள் மேலோங்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் இனிதே நிறைவேறும். உங்களின் மதிப்பு உயரும். உடல்நலம் சீராகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பீர்கள். அதனால் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கவனத்துடன் செயல்பட்டால் உறவில் சங்கடங்கள் ஏற்படாது. கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டவும். பால் வியாபாரம் செய்வோர் கூடுதல் வருமானத்தைப் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். நன்மை தரும் திருப்பங்களைக் காண்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகளைச் சந்திப்பீர்கள். பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு பெருமை அடைவீர்கள்.

பரிகாரம்: அம்பாள் தரிசனம் உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 23,28. 

சந்திராஷ்டமம்: 26,27.

•••

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

தர்ம சிந்தனைகள் மேலோங்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். ஆனாலும் எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றபடி குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும். 

உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாது உழைக்க முயற்சிக்கவும். வேலைகளைப் பிறகு செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தைத் தவிர்க்கவும். வியாபாரிகள் கடையை நவீனப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். கடன்களை திருப்பி அடைத்து விடுவீர்கள். விவசாயிகள் புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே கிடைக்கும். திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும். நண்பர்களால் நன்மையடைவீர்கள். பெண்மணிகள் கணவருடன் நேசமாகப் பழகி பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளவும். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களை அள்ளுவீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 25,27. 

சந்திராஷ்டமம்: 28,29,30.

•••

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் வலுப்படும். சிலருக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். செய்தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உற்றார் உறவினர்களும் நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். 

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் சக ஊழியர்கள் பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். நண்பர்களைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். விவசாயத் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்லவும். 

அரசியல்வாதிகளுக்கு சில எதிர்ப்புகள் தோன்றினாலும் கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாது. கட்சித் தலைமையின் கவனத்தைக் கவர முயற்சி செய்யுங்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வெற்றியை அடையலாம். 

பெண்மணிகளுக்கு சற்றுக் குழப்பமான நிலைமை தென்படும். மாணவமணிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ள முடியும். நண்பர்களிடம் விட்டுக் கொடுத்துப் பழகவும்.

பரிகாரம்: சூரியபகவானை தினமும் காலையில் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 24,27. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

வரவுக்கேற்ற செலவு செய்ய நேரிடும். உறவினர்களின் அலட்சியப்போக்கைப் பெரிதுபடுத்த வேண்டாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தோரிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி தெளிவு தென்படும். திட்டமிட்ட வேலைகளில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்கள் எடுந்த வேலைகள் அனைத்தையும் பிரச்னையின்றி முடிப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லைகள் குறையும். வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிவரும். விவசாயிகளுக்கு கொள் முதலில் நல்ல லாபம் கிடைக்கும். கால்நடைகளால் வருமானத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளின் திட்டங்கள் அனைத்தும் ஈடேறும். மாற்றுக் கட்சியினரும் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். கலைத்துறையினரின் புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தி பாராட்டு மழையில் நனைவீர்கள். பெண்மணிகளுக்கு உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் சுற்றுலா சென்று வருவார்கள். 

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 26,27.

சந்திராஷ்டமம்: இல்லை.

•••

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உங்கள் அறிவாற்றல் அதிகரிக்கும். தடைகளைத்தாண்டி வெற்றி பெறுவீர்கள். வருமானம் பல வகையிலும் உங்களை வந்து சேரும். மனதிலும் உடலிலும் புதிய பொலிவு தென்படும். மேலும் சிறு விரயங்களும் ஏற்படும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைத்திறன் அதிகரிக்கும். வருமானம் பெருகும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். புதிய வர்த்தகம் செய்யும் எண்ணம் மேலோங்கும். விவசாயிகள் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். விவசாயத் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் விலகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் தடைகள் உண்டாகும். இருப்பினும் புதிய படைப்புகளைத் தயாரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் காண்பீர்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 24,28. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மதிப்பு மரியாதை உயரும். நீண்டகால எண்ணங்களில் ஒன்று நிறைவேறும். வருமானம் சீராக இருந்தாலும் செலவுகள் செய்யும்போது கவனமாக இருக்கவும். மேலும் இந்த வாரம் எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தரவேண்டாம். 

உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்கேற்ற பலனை அனுபவிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும் கூடுதல் அக்கறையோடு இருந்தால்தான் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு கொள் முதல் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடலாம். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிரிகளின் பலம் அதிகரிப்பதால் விட்டுக்கொடுத்து செயல்படவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களுக்காக சில தியாகங்களைச் செய்ய நேரிடும். அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ளவும். பெண்மணிகள் குடும்பத்தாரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். அன்பினால் சுற்றத்தாரை கவர்வீர்கள்.

மாணவமணிகள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். வெளிவிளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 23,24.

சந்திராஷ்டமம்: இல்லை.

•••

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்களின் நீண்டகால எண்ணங்களில் ஒன்று இந்த வாரம் நிறைவேறும். நடக்காது என்று நினைத்திருந்த விஷயங்களும் திடீரென்று நடந்தேறிவிடும். விடாமுயற்சியால் உங்கள் செயல்களைச் சாதகமாக முடித்து விடுவீர்கள். உங்கள் மதிப்பு உயரும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். 

உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர திட்டமிட்டுச் செய்து முடிப்பீர்கள். விரும்பிய இடமாற்றத்தைப் பெறுவீர்கள். வருமானம் சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக முடியும். ஆனாலும் கூட்டாளிகள் உங்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருப்பார்கள். விவசாயிகள் லாபத்தைப் பெறுவீர்கள். கால்நடைகளையும் வாங்கி வருமானத்தைப் பெருக்கவும். 

அரசியல்வாதிகள் அனுசரித்துச் செல்லவும். கட்சி மேலிடத்தின் பார்வையிலிருந்து சற்று விலகியே இருக்கவும். கலைத்துறையினர் உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகமடைவீர்கள். ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். 

பெண்மணிகள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடுவது நல்லது. வெளி விளையாட்டுகளின்போது மிகுந்த கவனம் தேவை.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 29,30.

சந்திராஷ்டமம்: இல்லை.

•••

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். பொருளாதாரம் சிறக்கும். சொத்து விஷயமாக இருந்து வந்த தொல்லைகள் குறையும். உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சிலருக்கு வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைக்கவும். அலுவலகம் தொடர்பான பயணங்களைத் தள்ளிப்போடவும். வியாபாரிகள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். புதிய குத்தகைகளால் லாபம் கொட்டும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். இருப்பினும் மக்களுக்கான போராட்டங்களில் புதிய வேகத்துடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டால் முதன்மை 
பெறுவீர்கள்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 28,29. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வருமானத்தில் உயர்வைக் காண்பீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் நன்மையில் முடியும். செயல்களில் முக்கிய திருப்பங்களைக் காண்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி பூத்துக்குலுங்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை கவனத்தோடு செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாகப் பழகவும். வியாபாரிகள் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். கூட்டாளிகள் உங்களுக்கு தேவையான ஒத்துழைப்பை நல்குவார்கள். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களால் நல்ல பலனை அடைவார்கள். கால்நடைகளின் மூலம் விவசாயத்தைப் பெருக்க இது சாதகமான வாரம். 

அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். மேலிடத்தின் ஆதரவு குறையும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். ரசிகர்களின் ஆதரவும் சிறப்பாகவே இருக்கும். 
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 27,30. 

சந்திராஷ்டமம்: இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com