சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக 'சேஃப் சபரிமலை' செயலி அறிமுகம்

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சேஃப் சபரிமலை என்ற அலைபேசி செயலி (ஆப்) ஒன்றை கேரள போலீஸ் அறிமுகம் செய்துள்ளது. 
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக 'சேஃப் சபரிமலை' செயலி அறிமுகம்

கோழிக்கோடு: சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சேஃப் சபரிமலை என்ற அலைபேசி செயலி (ஆப்) ஒன்றை கேரள போலீஸ் அறிமுகம் செய்துள்ளது. 

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த ஆப் பதிவிறக்கம் தெய்துகொள்ளலாம். இந்த ஆப்-யில் சபரிமலை தொடர்பான விபரங்களை உடனுக்குடன்  தெரிந்துகொள்ளலாம். பம்பையில் சக்கு பாலம், ஹில்டாப், திருவேணி ஆகிய இடங்களில் பார்க்கிங் இடவசதி, சன்னிதானத்தில் கூட்டம், தரிசனம் செய்ய ஆகும் நேரம் போன்ற விவரங்கள் உடனுக்குடன் அறிந்த கொள்ளலாம். 

இதுபோல சபரிமலை பாதையில் உள்ள முக்கிய கோயில்கள், பெட்ரோல் பம்ப், ஏ.டி.எம், மருத்துவமனைகள், ஓய்வெடுக்கும் அறைகள், டோலி வசதி போன்ற விபரங்களும் கிடைக்கும். 

மேலும், பம்பைக்கு வரும் பக்தர்கள் தாங்கள் தவறவிடும் பொருட்கள் எந்த காவல் நிலையத்தில் உள்ளது உள்ளிட்ட விபரங்களும் இந்த ஆப்யில் தெரிந்துகொள்ளலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com