குடம் குடமாய் எண்ணெய் ஊற்றினாலும் உறிஞ்சிக் கொள்ளுமாம் இந்த அதிசய லிங்கம்!

கோவில்களில் நடக்கும் அதிசயங்களைக் காண கண் கோடி வேண்டும். அந்த வகையில் இந்தக் கோயிலில் என்ன ஸ்பெஷல் என்று பார்ப்போம். 
குடம் குடமாய் எண்ணெய் ஊற்றினாலும் உறிஞ்சிக் கொள்ளுமாம் இந்த அதிசய லிங்கம்!

கோவில்களில் நடக்கும் அதிசயங்களைக் காண கண் கோடி வேண்டும். அந்த வகையில் இந்தக் கோயிலில் என்ன ஸ்பெஷல் என்று பார்ப்போம். 

எவ்வளவு எண்ணெய்யை ஊற்றினாலும் அதை அப்படியே தன்னுள் உறிஞ்சிக்கொள்ளுமாம் இந்த அதிசய லிங்கம். அப்படிப்பட்ட அதிசய லிங்கம் எங்கு உள்ளது? 

தஞ்சை மாவட்டம் திருநீலக்குடியில் உள்ளது அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில். 1000-2000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்தப் பழமையான கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. இத்தல இறைவனின் பெயர் நீலகண்டேசுவரர், இறைவியின் பெயர் ஒப்பிலாமுலையாள். இத்தலத்தில் இறைவன் நீலகண்டேஸ்வரருக்கு செய்யப்படும் நல்லெண்ணய் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இங்குள்ள மூலவருக்கு எண்ணெய்யால் அபிஷேகம் செய்யும்போது பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெய்யை சுவாமியின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்களாம். எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது.

நாள் பூராவும் எண்ணெய் அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் உறிஞ்சப்பட்டு விடுமாம். இதில் என்ன ஆச்சர்யம் என்றால், அபிஷேகம் செய்த அடுத்த நாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெய்யே தடவாதது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படுமாம். அய்யனே என்னே அதிசயம் உமது. 

அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய்யெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இன்னும் புலப்படவில்லை. எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத் திருமேனி வழுவழுப்பாக இருப்பதற்குப் பதில் சொர சொரப்பாகவே இருக்கிறது.

நாள் முழுக்க பாத்திரம் பாத்திரமாக ஊற்றப்படும் எண்ணெய்யை சிவலிங்கம் எப்படி உறிஞ்சுகிறது? உறிஞ்சப்படும் எண்ணெய் என்ன ஆகிறது? இப்படி எந்தக் கேள்விகளுக்கான விடையும் இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வந்த நஞ்சை சிவன் உண்ட கதை நமக்குத் தெரியும். அந்த நஞ்சின் விஷத்தன்மையை குறைக்கவே இந்தக் கோவிலில் இப்படி ஒரு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெய்யை உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும்.

பிரிந்திருக்கும் தம்பதியர் இங்குள்ள திருநீலகண்டரை மனமுருக வழிபட்டால், மீண்டும் ஒன்று சேருவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com