புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரத்தை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். எனவே, ஒவ்வொரு மாதமும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில், புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி, வியாழக்கிழமை அதிகாலை 1.38 மணி முதல் அடுத்தநாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.53 மணி வரை கிரிவலம் வரலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.