'மக்கள் நலமுடன் வாழ கோயில்களில் வழிபாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும்'

நாட்டில் மக்கள் நலமுடன் வாழ கோயில்களில் பூஜைகள் உள்ளிட்ட வழிபாடுகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என தருமபுர ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்
 சம்ஸ்கிருத தின விழாவில் (வலமிருந்து) சம்ஸ்கிருத விற்பன்னர்களின் கையேட்டை தொடங்கி வைக்கிறார் தருமபுர ஆதீன இளைய  சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் 
 சம்ஸ்கிருத தின விழாவில் (வலமிருந்து) சம்ஸ்கிருத விற்பன்னர்களின் கையேட்டை தொடங்கி வைக்கிறார் தருமபுர ஆதீன இளைய  சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் 

நாட்டில் மக்கள் நலமுடன் வாழ கோயில்களில் பூஜைகள் உள்ளிட்ட வழிபாடுகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என தருமபுர ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் கூறினார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சம்ஸ்கிருத கல்லூரியில் சம்ஸ்கிருத தினவிழா புதன்கிழமை (அக்.11) நடைபெற்றது. விழாவில் தருமபுர ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் கலந்துகொண்டு சம்ஸ்கிருத இரண்டாம் நிலை (பிரவேஷிகா-2) ஆன்லைன் வகுப்புகளைத் தொடக்கி வைத்தார். இதையடுத்து சம்ஸ்கிருத தினவிழா தொடர்பாக நடத்தப்பட்ட இலக்கியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை அவர் வழங்கினார்.
விழாவில் தருமபுர ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பேசியது: தாய்மொழி தமிழ் என்றால் தந்தை மொழி சம்ஸ்கிருதம். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என ஒளவையார் கூறியுள்ளார். இதில் அன்னை என்பது தமிழ். பிதா என்பது சம்ஸ்கிருதம் ஆகும். சம்ஸ்கிருத மொழியின் சொற்கள் சிவபெருமானின் உடுக்கையிலிருந்து தோன்றியது என ஆன்றோர் கூறுவர்.
நான்கு வேதங்கள், பல தொன்மையான இந்திய இலக்கியங்கள் இந்த மொழியில்தான் எழுதப்பட்டுள்ளன. வேதங்கள் ஒலிக்கும் ஊரில் பிறக்க வேண்டும்; நான்கு மறைகள் பயிலாத நாட்டில் பிறப்பதை நரகத்துக்கு ஒப்பாகக் கூறுவர். இதையெல்லாம் பிற்காலக் கதைகள் என்று சொல்லுவோரும்கூட வியந்து போற்றக்கூடிய சில மொழியியல் அம்சங்கள் சம்ஸ்கிருதத்துக்கு அமைந்துள்ளன. 
மக்கள் நலமுடன் வாழ கோயில்களில் வழிபாடுகள் சிறப்புடன் நடைபெற வேண்டும். இத்தகைய வழிபாட்டு முறைகள் இருப்பதற்கும் மொழிதான் காரணம். தற்போது இணையதள வகுப்புகள் தொடங்கப்பட்டு மொழி கற்பித்தலில் புதுமையைப் புகுத்தும்போது அதன் பெருமை மேலும் தழைத்தோங்கும் என்றார் அவர். 
விழாவில் சம்ஸ்கிருத அறிஞர் ஹெச்.சூர்யநாராயண பட், நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் , 'கிளாசில்' நிறுவன இயக்குநர் நடராஜன், குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சம்ஸ்கிருத அகாதெமி தலைவர் கே.சீனிவாசன், சென்னை சம்ஸ்கிருத கல்லூரியின் முதல்வர் டி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com