யமதர்மன் தன் தங்கையிடம் அன்பை பரிமாறும் "பாய்தூஜ்"

தீபாவளியின் ஐந்து மற்றும் ஆறாவது நாள் கொண்டாடப்படுவது தான் "பாய்ததூஜ்". அதென்ன புதுவித கொண்டாட்டம்? 
யமதர்மன் தன் தங்கையிடம் அன்பை பரிமாறும் "பாய்தூஜ்"

தீபாவளியின் ஐந்து மற்றும் ஆறாவது நாள் கொண்டாடப்படுவது தான் "பாய்ததூஜ்". அதென்ன புதுவித கொண்டாட்டம்? 

இல்லை....இது பழங்கால கொண்டாட்டம் தான். சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இடையே உள்ள அன்பை நினைவுபடுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 

திருமணமாகி வேறு வீட்டிற்குச் செல்லும் தன் சகோதரியை அன்றைய தினம் அண்ணன்மார்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்று புது துணி, இனிப்பு, பட்டாசு போன்றவற்றை அளித்து தங்கள் அன்பை 
பரிமாறிக்கொள்வார்கள். 

வங்காள நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்த நாளை "பாய் போட்டா" எனவும், குஜராத்தியர்கள் இந்த நாளை "பாய் பிஜ்" எனவும் அழைப்பார்கள். 

இந்த நாளில் தான் மரணத்தின் கடவுள் என்று அழைக்கப்படும் யமதர்மராஜா தன் தங்கையான "யாமி"யை யமுனை நதிக்கரையில் சந்தித்தாக புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் யாமி தன் சகோதரரான எமனுக்கு விருந்து படைத்து, வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

அதே போல், சகோதரர்கள் தங்களது சகோதரிகளின் இல்லங்களுக்குச் சென்று அவர்கள் நலம் விசாரிக்கும் தினமாக கடைப்பிடிக்கின்றனர். சகோதரிகளும் அன்றைய தினம் விளக்குகள் ஏற்றிவைத்து சகோதரனை வரவேற்று நெற்றியில் குங்குமம் இட்டு, அவர்களின் நலன், வெற்றிக்காகப் பூஜைகள் செய்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com