நாவல் மரத்தில் இருந்து உற்பத்தியாகும் அதிசய தீர்த்தம்!

பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும் சில ஆச்சரியமான அற்புதங்கள் நடைபெறும். அதற்குக் காரணம் அங்கு காணப்படும் கடவுளின் சக்தியாகும். 
நாவல் மரத்தில் இருந்து உற்பத்தியாகும் அதிசய தீர்த்தம்!

பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும் சில ஆச்சரியமான அற்புதங்கள் நடைபெறும். அதற்குக் காரணம் அங்கு காணப்படும் கடவுளின் சக்தியாகும். அப்படி ஒரு அதிசய நிகழ்வு ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது.

பல அற்புதமான காட்சி அமைப்புகளோடு அழகான இடமான கோயில் பட்டணமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து 6 கி.மீ தொலைவிலேயே குன்றின் மீது எழில்மிகும் அழகோடு கட்டழகர் கோயில் ஒன்று மலை உச்சியில் மிகப் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கின்றது.

இங்கு சுந்தரவல்லி, சௌந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலை மீதுள்ள இக்கோயிலுக்குச் செல்ல 247 படிகள் ஏறி தான் செல்ல வேண்டும். இந்த படிக்கட்டுகள் தமிழ் எழுத்துகள் 247-ஐ உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

மேலும் இந்த மலை மீது "சிலம்பு ஊற்று" என்ற தீர்த்தம் இருக்கிறது. இது அங்குள்ள நாவல் மரப் பொந்தில் இருந்து உற்பத்தியாவது அதிசயமான ஒன்றாகும். அந்த நீர் ஊற்றில் இருந்து நீரானது கீழ்நோக்கி மட்டுமே செல்கின்றதாம். அக்காட்சி காண்பவர் மனதைக் கொள்ளை கொள்கின்றது. இந்த தீர்த்தம் சகல நோய்களை தீர்க்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

அது மட்டுமில்லாமல் கோயிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் அதி அற்புதமாகக் காட்சியளிக்கிறதாம். 

இது சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாகவும், வழிபாட்டிற்கு புனித தலமாகவும் கருதப்படுகின்றது. வார இறுதி நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படுகிறது. இக்கோவில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்து இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com