3,500 வருடம் பழமையான அதிசய மாமரம் உள்ள திருத்தலம்!

சுமார் 3,500 ஆண்டுகளாகப் பட்டுப்போகாமல் அதிசய ஒற்றை மாமரம் எந்தக் கோயிலில் உள்ளது? அந்த மாமரத்திற்கு அப்படியென்ன சிறப்பு என்பதைப் பார்ப்போம். 
3,500 வருடம் பழமையான அதிசய மாமரம் உள்ள திருத்தலம்!

சுமார் 3,500 ஆண்டுகளாகப் பட்டுப்போகாமல் அதிசய ஒற்றை மாமரம் எந்தக் கோயிலில் உள்ளது? அந்த மாமரத்திற்கு அப்படியென்ன சிறப்பு என்பதைப் பார்ப்போம். 

சுமார் 1000 வருடம் பழமையான இந்த திருந்தலத்தில் உள்ள மாமரத்தின் அடியில் தான் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தப்படி சிவனை நோக்கித் திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது திருமணக்கோலம் என்கிறார்கள். அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம்.

இப்படிப் பல அதிசயங்களைக் கொண்ட திருக்கோயில் காஞ்சிபுரத்தில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரில் மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி ஏகாம்பரேஸ்வர் என அழைக்கப்படுகிறார். ஏகம்-ஒரு ஆம்ரம்-மரம் எனப் பொருள். இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர். 

இந்த ஒற்றை மாமரம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத்தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது. 

இங்கு சிவபெருமான் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் சிவலிங்கத்தில் உள்ளதை காணலாம். மேலும், ரதசப்தமி தினத்தன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவது இத்தலத்தின் சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com