ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத செயல்பாடுகள் / காரியங்களை ஜோதிட சாஸ்திரம்....
ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத செயல்பாடுகள் / காரியங்களை ஜோதிட சாஸ்திரம் வரையறுத்துள்ளது.

ஜென்ம நட்சத்திரதன்று செய்யக்கூடியவை

புதிதாகக் கல்வி கற்றல் / கற்பித்தல்
உயர் பதவி ஏற்பு
அசையும் / அசையா சொத்துக்களை பார்வையிடுதல் / வாங்குதல்
பத்திரம் பதிவு செய்தல்
யாகங்கள் செய்தல்
அன்னதானம் / தர்ம காரியங்கள் செய்தல்
உபநயனம் செய்தல்
கிரஹப்பிரவேசம் செய்தல்

ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடாதவை

நோயாளிகள் முதன்முதலாக மருந்து எடுத்துக்கொள்ளுதல்
தம்பதியருக்குத் திருமணம் செய்வித்தல்
திருமணம் ஆன பெண்ணுக்கு சீமந்தம் செய்தல்
சாந்தி முகூர்த்தம் செய்தல்

ஒரு சில நட்சத்திரங்களில் முற்றிலும் செய்யக்கூடாத செயல்கள் / காரியங்கள்

ஜோதிட சாஸ்திரப்படியும், முன்னோர்களின் வாக்குப்படியும் பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய 12 நட்சத்திரங்கள் உடைய நாள்களில் செய்யக்கூடாதவை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவை –

கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது
நெடுந்தூரப் பயணம் செல்லக்கூடாது
பெரிய அறுவைச் சிகிச்சை செய்யக்கூடாது
முக்கியமான எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது.

இருப்பினும், ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்கள், மேற்கண்ட நாளில், மேற்கண்ட காரியங்களைச் செய்து அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வருவது என்பது இயலாத காரியம். என்றாலும், அப்படியே நடந்தாலும் ஒரு மிகவும் அரிதாகவே இருக்கும்.

ஆக, 27 நட்சத்திரங்களில் கோச்சார முறையில் செய்யக்கூடிய உகந்த காரியங்களின் விவரமான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்துப் பயன்பெறுங்கள்.

27 நட்சத்திரங்களில் (கோச்சார) செய்யக்கூடிய உகந்த காரியங்களின் அட்டவணை

நட்சத்திரம்: அசுவினி

தன்மை/நாட்கள்: சமநோக்கு நாள்

திருமணம் செய்ய, புதுமனைபுக, கல்விகற்க, உபநயனம், பதவி ஏற்க, தானியம் வாங்க, மாடு வாகனம் ஆபரணம் வாங்க, மாங்கல்யம் செய்ய, சாந்தி முகூர்த்தம், வெளிநாடு செல்ல, மருந்து சாப்பிர, விதை விதைக்க, பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: நாற்கால் ஜீவராசிகள் வாங்கல், ஏற்றம், உழவு, வாசற்கால் வைத்தல், கால்வாய் வெட்டுதல் ஆகிவற்றிற்கு உகந்ததாகும்.

நட்சத்திரம்: பரணி

தன்மை/நாட்கள்: கீழ்நோக்கு நாள்

ஆயுத பிரயோகம்,, வியாதியஸ்தர் குளிக்க, கதிர் அறுக்க, மாடு வாங்க, அடுப்பு வைக்க, தானியம் களஞ்சியத்தில் வைக்க என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: குளம் வெட்ட, கிணறு தோண்ட, புதையல் எடுத்தல், தானிய களஞ்சியம் அமைத்தல் வேலி போடுதல், கணிதம் ஆரம்பிக்கஉத்தமமாகும்.

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்:  -------

நட்சத்திரம்:  கிருத்திகை

தன்மை/நாட்கள்: கீழ்நோக்கு நாள்

ஹோமம், சமையல் செய்ய, சூளைக்கு நெருப்பு வைக்க, கடன் வழங்க, சுரங்கம் வெட்ட என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்:

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்:  -------

நட்சத்திரம்: ரோகிணி

தன்மை/நாட்கள்: மேல்நோக்கு நாள்

சீமந்தம் செய்ய, பெயர்சூட்ட, விருந்துண்ண, உபநயணம், கல்வி கற்க, ஆலய ஆரம்பம், கும்பாபிஷேகம், கிரகப்பிரவேசம், யாகம், நவக்கிர சாந்தி, வியாபாரம், கிணறு வெட்ட, விவாகம், பதவியேற்க என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: உப்பரிகை, கொடிமரம், மதில்சுவர், வாசகால், குதிரை கொட்டகை பந்தல், பட்டாபிஷேகம் ஆகியவை செய்வது உத்தமமாகும்.

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்:  -------

நட்சத்திரம்: மிருகசீர்ஷம்

தன்மை/நாட்கள்: சமநோக்கு நாள்

சீமந்தம், புதுமனைபுக, நாமகரணம், காதுகுத்த, உபநயனம், விவாகம், பதவி ஏற்க, தாணியம், வாகனம், மாடு வாங்க, ஆயுதம் பயில, குளம், கிணறு வெட்ட, வியாதியஸ்தர் குளிக்க, மருந்துண்ணுதல் என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்:  நாற்கால் ஜீவராசிகள் வாங்கல், ஏற்றம், உழவு, வாசல் கால்வைத்தல், கால்வாய் வெட்டுதல் ஆகியவற்றிற்கு உகந்ததாகும்.

நட்சத்திரம்: திருவாதிரை

தன்மை/நாட்கள்: மேல்நோக்கு நாள்

காதுகுத்த, சிவபூஜை செய்ய, கல்வி கற்க, ஆயுத பிரயோகம், குழந்தையை தொட்டிலிட, சூளைசர நெருப்பு வைத்தல் என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: உப்பரிகை, கொடிமரம், மதில்சுவர், வாசகால், குதிரை கொட்டகை பந்தல், பட்டாபிஷேகம் ஆகியவை செய்வது உத்தமமாகும்.

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

நட்சத்திரம்: புனர்பூசம்

தன்மை/நாட்கள்: சமநோக்கு நாள்

சீமந்தம், புதுமனைபுக, வாஸ்து பூஜை, விவாகம், பதவி ஏற்க, காதுகுத்த, கல்வி கற்க, உபநயனம், ஏர்கூட்ட, ஆயுதம் பயில, வாகனம் வாங்க, விவசாயம் செய்ய, யாத்திரை, வெளிநாடு செல்லுதல் என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: நாற்கால் ஜீவராசிகள் வாங்கல், ஏற்றம், உழவு, வாசல்கால் வைத்தல், கால்வாய் வெட்டுதல் ஆகியவற்றிற்கு உகந்ததாகும்.

நட்சத்திரம்: பூசம்

தன்மை/நாட்கள்: மேல்நோக்கு நாள்

பதவி ஏற்க, சபை கூட்ட, சிமந்தம், வாஸ்து செய்ய, மாடு வாங்க, விவாகம், கிரகப்பிரவேசம் செய்தல், நகை அணிதல், யாத்திரை வெளிநாடு செல்லல், வியாதிஸ்தர் குளிக்க என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: உப்பரிகை, கொடிமரம், மதில் சுவர், வாசல் கால், குதிரைக் கொட்டகை பந்தல், பட்டாபிஷேகம் ஆகியவை செய்வது உத்தமம்.

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

நட்சத்திரம்: ஆயில்யம்

தன்மை/நாட்கள்: கீழ்நோக்கு நாள்

நவக்கிரக சாந்தி செய்தல், ஆயுதம் பயில, வாஸ்து பூஜை, கிணறு வெட்ட, திருமாங்கல்யம் செய்தல், மந்திரம் பிரயோகம் செய்தல் என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: குளம் வெட்ட, கிணறு தோண்ட, புதையல் எடுத்தல், தானியக் களஞ்சியம் அமைத்தல், வேலி போடுதல், கணிதம் ஆரம்பிக்க உத்தமமாகும்.

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

நட்சத்திரம்: மகம்

தன்மை/நாட்கள்: கீழ்நோக்கு நாள்

திருமணம், நிகழ்வு, பயிர் தொழில் செய்ய, வாகனம் கற்றல், ஆயுதம் பயில, வாஸ்து பூஜை, கிணறு வெட்ட, திருமாங்கல்யம் செய்தல், மந்திரம் பிரயோகம் செய்தல் என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: குளம் வெட்ட, கிணறு தோண்ட, புதையல் எடுத்தல், தானியக்களஞ்சியம் அமைத்தல், வேலி போடுதல், கணிதம் ஆரம்பிக்க உத்தமமாகும்.

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

நட்சத்திரம்: பூரம்

தன்மை/நாட்கள்: கீழ்நோக்கு நாள்

கிரக சாந்தி செய்ய, சித்திரம் எழுத, மாடு வாங்க, வியாதிஸ்ர் குளிக்க என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

நட்சத்திரம்: உத்திரம்

தன்மை/நாட்கள்: மேல்நோக்கு நாள்

பூமுடிக்க, சீமந்தம், உபநயனம், திருமணம், அன்னபிரசன்னம், காதுகுத்தல், கல்வி கற்க, ஆபரணம் அணிதல், கிரகப்பிரவேசம், திருமாங்கல்யம் செய்ய, கடல் பிரயாணம் என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: உப்பரிகை, கொடிமரம், மதில் சுவர், வாசல் கால், குதிரைக் கொட்டகை பந்தல், பட்டாபிஷேகம் ஆகியவை செய்வது உத்தமம்.

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

நட்சத்திரம்: ஹஸ்தம்

தன்மை/நாட்கள்: சமநோக்கு நாள்

சீமந்தம், பெயர்சூட்ட, உபநயனம், திருமணம், கும்பாபிஷேகம், சாஸ்திரம் கற்றல், குளம், கிணறு வெட்ட, கிரகப்பிரவேசம், ருது சாந்தி, ராஜதரிசனம் செய்தல் என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: நாற்கால் ஜீவராசிகள் வாங்கல், ஏற்றம், உழவு, வாசல்கால் வைத்தல், கால்வாய் வெட்டுதல் ஆகியவற்றிற்கு உகந்ததாகும்.

நட்சத்திரம்: சித்திரை

தன்மை/நாட்கள்: சமநோக்கு நாள்

புதுமனைபுகுதல், கல்வி கற்க, உபநயனம் செய்ய, பதவி ஏற்க, பயிர் தொழில் செய்ய, திருமணம் செய்ய, கிரகபிரவேசம் செய்ய, வாஸ்து பூஜை செய்ய, நவக்கிரஹ ஜெபம் செய்ய, பத்திரிகை ஆரம்பிக்க என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

நட்சத்திரம்: சுவாதி

நட்சத்திரம்: விசாகம்

தன்மை/நாட்கள்: கீழ்நோக்கு நாள்

கதிரறுக்க, கோடி வஸ்திரம் அணிய, கிணறு சரிசெய்ய என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: குளம், கிணறு வெட்ட, புதையல் எடுக்க, தாணிய களஞ்சியம் அமைக்க, வேலி போட, கணிதம் ஆரம்பிக்க உகந்ததாகும்.

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

நட்சத்திரம்: அனுஷம்

தன்மை/நாட்கள்: சமநோக்கு நாள்

ருதுசாந்தி, பூமுடிக்க, நாமகரணம், காது குத்த, உபநயனம், ஆபரணம் அணிய, பதவி ஏற்க, வாகனம் ஒட்ட, கிரஹப்பிரவேசம், வாசல்கால் வைக்க, திருமணம், வாஸ்துபூஜை, கதிர்அறுக்க என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: நாற்கால் ஜீவராசிகள் வாங்கல், ஏற்றம், உழவு, வாசல்கால் வைத்தல், கால்வாய் வெட்டுதல் ஆகியவற்றிற்கு உகந்ததாகும்.

நட்சத்திரம்: கேட்டை

தன்மை/நாட்கள்: சமநோக்கு நாள்

மாடு வாங்க, மந்திரம் ஜெபிக்க, கடன் தீர்க்க, வாஸ்து சாந்தி செய்ய, குளம், கிணறு வெட்ட, நோயாளி குளிக்க என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

நட்சத்திரம்: மூலம்

தன்மை/நாட்கள்: கீழ்நோக்கு நாள்

நாமகரணம், திருமணம், சீமந்தம், உபநயணம் செய்ய, விதை விதைக்க, கடன் தீர்க்க உகந்தது. என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: குளம், கிணறு வெட்ட, புதையல் எடுக்க, தாணிய களஞ்சியம் அமைக்க, வேலி போட, கணிதம் ஆரம்பிக்க உகந்ததாகும்.

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

நட்சத்திரம்: பூராடம்

தன்மை/நாட்கள்: கீழ்நோக்கு நாள்

கணிதம் பயில, கடன் தீர்க்க, வியாதிஸ்தர் குளிக்க, மாடு வாங்க என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

நட்சத்திரம்: உத்திராடம்

தன்மை/நாட்கள்: மேல்நோக்கு நாள்

சீமந்தம், நாமகரணம், காதுகுத்த, திருமணம், கிரஹப்பிரவேசம் செய்ய, குளம்-கிணறு வெட்ட, நெடுந்தூர யாத்திரை செய்ய, குழந்தையை தொட்டிலிட என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: உப்பரிகை, கொடிமரம், மதில்சுவர், வாசக்கால் நட, குதிரைக் கொட்டகை பந்தல், பட்டாபிஷேகம் செய்ய உகந்ததாகும்.

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

நட்சத்திரம்: திருவோணம்

தன்மை/நாட்கள்: மேல்நோக்கு நாள்

ருதுசாந்தி, பூமுடிக்க, நாமகரணம், திருமணம், அன்னபிரசன்னம், காது குத்த, கும்பாபிஷேகம், ஹோமசாந்தி, பயிர் தொழில் செய்ய, கடன்தீர்க்க  என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

நட்சத்திரம்: அவிட்டம்

தன்மை/நாட்கள்: மேல்நோக்கு நாள்

பூமுடிக்க, நாமகர்ணம், கல்வி கற்க, வெளிநாடு செல்ல, திருமாங்கல்யம் செய்ய, தாணியம் வாங்கம், விவகாரம் முடிக்க, மருந்து சாப்பிட என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

நட்சத்திரம்: சதயம்

தன்மை/நாட்கள்: மேல்நோக்கு நாள்

நாமகர்ணம், பூ முடிக்க, அன்னப்பிரசன்னம் கல்வி கற்க, வெளிநாடு செல்ல, திருமாங்கல்யம் செய்ய, தாணியம் வாங்கம், விவகாரம் முடிக்க, மருந்து சாப்பிட என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

நட்சத்திரம்: பூரட்டாதி

தன்மை/நாட்கள்: கீழ்நோக்கு நாள்

மந்திரம் ஜெபிக்க, சாந்தி செய்தல், சூளை பிரிக்க என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: -------

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: குளம், கிணறு வெட்ட, புதையல் எடுக்க, தானிய களஞ்சியம் அமைக்க, வேலிபோட, கணிதம் ஆரம்பிக்க உகந்ததாகும்.

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

நட்சத்திரம்: உத்திரட்டாதி

தன்மை/நாட்கள்: மேல்நோக்கு நாள்

ருதுசாந்தி, பூமுடிக்க, சீமந்தம், நாமகரணம், ஆலயம், கோபுரம் ஆரம்பிக்க, குளம்-கிணறு வெட்ட, காதுகுத்த, கல்வி கற்க, திருமணம் செய்ய, விவாகம் முடிக்க, யாத்திரை போக என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்: உப்பரிகை, கொடிமரம், மதில்சுவர், வாசல்கால் நட, குதிரைக் கொட்டகை பந்தல், பட்டாபிஷேகம் செய்ய உகந்ததாகும்.

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------
 
நட்சத்திரம்: ரேவதி    

தன்மை/நாட்கள்: சமநோக்கு நாள்

ருதுசாந்தி, பூமுடிக்க, சீமந்தம், பெயர் சூட்ட, காது குத்த, அன்னபிரசன்னம், உபநயனம், திருமணம், பிரயாணம் செய்ய, கும்பாபிஷேகம், குளம்-கிணறு வெட்ட, சுபகாரியம் செய்ய என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மேல்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய முக்கிய காரியங்கள்:

கீழ்நோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

சமநோக்கு நாட்களில் செய்யக்கூடிய காரியங்கள்: -------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com